• Aug 22 2026

கிளிநொச்சியில் முன்னாள் போராளிகளின் நிலை குறித்து சுமந்திரன் கலந்துரையாடல்

dorin / Aug 22nd 2026, 2:38 pm
image

கிளிநொச்சியில் முன்னாள் போராளிகளின் தற்போதைய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்த கலந்தரையாடல் நடைபெற்றது.

இக்கலந்தரையாடலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபியின் சட்டதரனியுமான எம். ஏ. சுமந்திரன் கலந்துகொண்டார்.

போருக்குப் பிந்தைய சூழலில் முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரச் சவால்கள், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அவர்களின் அன்றாடப் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கேட்டறியப்பட்டு ஆலோசிக்கப்பட்டது.  

சமூகத்திற்காகத் தியாகங்களைச் செய்த முன்னாள் போராளிகளுக்கு அரசியல் தளத்தில் உரிய அங்கீகாரமும் இடமும் வழங்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது.  

முன்னாள் போராளிகளின் எதிர்கால அரசியல் நிலைப்பாடு, அவர்களின் உரிமைகளுக்கான ஜனநாயகப்பூர்வமான நகர்வுகள் மற்றும் அவர்களை முதன்மை அரசியல் நீரோட்டத்தில் இணைப்பது தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்பட்டன. 

இக்கூட்டம் முன்னாள் போராளிகளின் மறுவாழ்வு மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகளில் அவர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதற்கான முக்கிய நிகழ்வாக அமைந்தது.

கிளிநொச்சியில் முன்னாள் போராளிகளின் நிலை குறித்து சுமந்திரன் கலந்துரையாடல் கிளிநொச்சியில் முன்னாள் போராளிகளின் தற்போதைய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்த கலந்தரையாடல் நடைபெற்றது.இக்கலந்தரையாடலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபியின் சட்டதரனியுமான எம். ஏ. சுமந்திரன் கலந்துகொண்டார்.போருக்குப் பிந்தைய சூழலில் முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரச் சவால்கள், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அவர்களின் அன்றாடப் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கேட்டறியப்பட்டு ஆலோசிக்கப்பட்டது.  சமூகத்திற்காகத் தியாகங்களைச் செய்த முன்னாள் போராளிகளுக்கு அரசியல் தளத்தில் உரிய அங்கீகாரமும் இடமும் வழங்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது.  முன்னாள் போராளிகளின் எதிர்கால அரசியல் நிலைப்பாடு, அவர்களின் உரிமைகளுக்கான ஜனநாயகப்பூர்வமான நகர்வுகள் மற்றும் அவர்களை முதன்மை அரசியல் நீரோட்டத்தில் இணைப்பது தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இக்கூட்டம் முன்னாள் போராளிகளின் மறுவாழ்வு மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகளில் அவர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதற்கான முக்கிய நிகழ்வாக அமைந்தது.

Advertisement

Advertisement

Advertisement