கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் பகுதியில் இன்று ஏற்பட்ட திடீர் மழையுடன் கூடிய பலத்த காற்று காரணமாக பல வர்த்தக நிலையங்கள் மற்றும் சந்தை கட்டடத் தொகுதி கடுமையாக சேதமடைந்துள்ளன.
பலத்த காற்றின் தாக்கத்தில் சந்தை வளாகத்தின் கூரைகள் சரிந்து விழுந்துள்ளது.
இதனுடன், மின்கம்பிகள் சேதமடைந்ததால் அந்தப் பகுதியில் மின்சார விநியோகமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் அப்பகுதி வர்த்தகர்களின் அன்றாட வியாபார நடவடிக்கைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.
கடைகளில் இருந்த பல லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாக வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தை அடுத்து மின்சார விநியோகத்தை சீரமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, நாட்டில் தொடர்ந்தும் மழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பரந்தனை புரட்டிய பலத்த காற்று; வர்த்தக நிலைய கூரைகள் பறந்தது மின்சாரம் துண்டிப்பு கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் பகுதியில் இன்று ஏற்பட்ட திடீர் மழையுடன் கூடிய பலத்த காற்று காரணமாக பல வர்த்தக நிலையங்கள் மற்றும் சந்தை கட்டடத் தொகுதி கடுமையாக சேதமடைந்துள்ளன.பலத்த காற்றின் தாக்கத்தில் சந்தை வளாகத்தின் கூரைகள் சரிந்து விழுந்துள்ளது.இதனுடன், மின்கம்பிகள் சேதமடைந்ததால் அந்தப் பகுதியில் மின்சார விநியோகமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவத்தால் அப்பகுதி வர்த்தகர்களின் அன்றாட வியாபார நடவடிக்கைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. கடைகளில் இருந்த பல லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாக வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.சம்பவத்தை அடுத்து மின்சார விநியோகத்தை சீரமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை, நாட்டில் தொடர்ந்தும் மழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.