• May 17 2026

இஸ்ரேலுக்கு இலங்கை தொழிலாளர்கள் மீண்டும் செல்லலாம்! வெளியான அறிவிப்பு

Chithra / Oct 4th 2025, 2:41 pm
image


இஸ்ரேலில் கட்டுமானத் துறையின் புதுப்பித்தல் துணைத் துறையில் வேலைவாய்ப்புகளுக்கு தகுதியான தொழிலாளர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 

25-45 வயதுக்குட்பட்ட ஆண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம், 

மேலும் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வேலை வகைக்கு நல்ல அனுபவத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 

இஸ்ரேலில் முன்பு பணிபுரியாதவராகவும், அங்கு வசிக்கும் அல்லது பணிபுரியும் உறவினர்கள் இல்லாதவராகவும் இருக்க வேண்டும். 

மேலும், 3 ஆண்டுகளுக்கு மேல் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு கட்டாயம். விண்ணப்பதாரர்கள் இஸ்ரேலின் காலநிலை மற்றும் வேலை நிலைமைகளுக்கு உடல் மற்றும் மனரீதியாக தகுதியுடையவர்களாகவும், நாள்பட்ட அல்லது தொற்று நோய்கள் இல்லாதவர்களாகவும், குற்றப் பின்னணி இல்லாதவர்களாகவும் இருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 10 வருட பாடசாலைக் கல்வியை முடித்திருக்க வேண்டும் மற்றும் அடிப்படை ஆங்கில அறிவு பெற்றிருக்க வேண்டும்.

தகுதிகளைப் பூர்த்தி செய்து வேலை வழங்கப்படும் தொழிலாளர்களுக்கு 63 மாத ஒப்பந்த காலம் மற்றும் மாதத்திற்கு 1520 அமெரிக்க டொலர் சம்பளம் மற்றும் கூடுதல் நேர கொடுப்பனவுகள் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இஸ்ரேலுக்கு இலங்கை தொழிலாளர்கள் மீண்டும் செல்லலாம் வெளியான அறிவிப்பு இஸ்ரேலில் கட்டுமானத் துறையின் புதுப்பித்தல் துணைத் துறையில் வேலைவாய்ப்புகளுக்கு தகுதியான தொழிலாளர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 25-45 வயதுக்குட்பட்ட ஆண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம், மேலும் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வேலை வகைக்கு நல்ல அனுபவத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் முன்பு பணிபுரியாதவராகவும், அங்கு வசிக்கும் அல்லது பணிபுரியும் உறவினர்கள் இல்லாதவராகவும் இருக்க வேண்டும். மேலும், 3 ஆண்டுகளுக்கு மேல் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு கட்டாயம். விண்ணப்பதாரர்கள் இஸ்ரேலின் காலநிலை மற்றும் வேலை நிலைமைகளுக்கு உடல் மற்றும் மனரீதியாக தகுதியுடையவர்களாகவும், நாள்பட்ட அல்லது தொற்று நோய்கள் இல்லாதவர்களாகவும், குற்றப் பின்னணி இல்லாதவர்களாகவும் இருக்க வேண்டும்.குறைந்தபட்சம் 10 வருட பாடசாலைக் கல்வியை முடித்திருக்க வேண்டும் மற்றும் அடிப்படை ஆங்கில அறிவு பெற்றிருக்க வேண்டும்.தகுதிகளைப் பூர்த்தி செய்து வேலை வழங்கப்படும் தொழிலாளர்களுக்கு 63 மாத ஒப்பந்த காலம் மற்றும் மாதத்திற்கு 1520 அமெரிக்க டொலர் சம்பளம் மற்றும் கூடுதல் நேர கொடுப்பனவுகள் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement