சிங்களத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஹேமால் ரணசிங்க வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
வெள்ளவத்தை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவம் ஒன்று தொடர்பாகவே இவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர் பயணித்த வாகனம் மற்றுமொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாகவும், அது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காகவே இவர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, பொலிஸாரால் கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இச்சம்பவம் குறித்து வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கை நடிகர் ஹேமல் ரணசிங்க கைது சிங்களத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஹேமால் ரணசிங்க வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். வெள்ளவத்தை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவம் ஒன்று தொடர்பாகவே இவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர் பயணித்த வாகனம் மற்றுமொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாகவும், அது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காகவே இவர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, பொலிஸாரால் கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இச்சம்பவம் குறித்து வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.