• Apr 18 2026

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் துயரம்; கடலில் மூழ்கி உயிரிழந்த இளைஞன்

Chithra / Feb 3rd 2026, 11:17 am
image

காலி - ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடலில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


காலி, கராந்துவ பகுதியை சேர்ந்த அச்சிர சனேஸ் சமரசேகர என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


தனது 20 ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக உறவினர்களுடன் சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


உயிரிழந்த இளைஞனின் தந்தை தெரிவிக்கையில், 


“எனக்கு நான்கு பிள்ளைகள். உயிரிழந்தது எனது கடைசி மகன். அவர் கடந்த 29 ஆம் திகதி தனது 20 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார்.


அதனை கொண்டாடுவதற்காக நாங்கள் கடற்கரை சென்றோம். அங்கு மகன் உறவினர்களுடன் பந்து விளையாடிக் கொண்டிருந்த போது பந்து கடலில் அடித்துச் செல்லப்பட்டது.


அதைப் பிடிக்கச் சென்ற மகன் அலையில் இழுத்துச் செல்லப்பட்டார். அவரைக் காப்பாற்ற முயன்ற மேலும் இருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட போதிலும், பிரதேசவாசிகளின் உதவியுடன் அவர்கள் மீட்கப்பட்டனர்.


ஆனால் எனது மகனை எங்களால் காப்பாற்ற முடியாமல் போனது. மகன் உயிரிழந்த இடத்திலேயே மறுநாள் அவரது சடலம் மிதந்த நிலையில் மீட்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.


நீரில் மூழ்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் துயரம்; கடலில் மூழ்கி உயிரிழந்த இளைஞன் காலி - ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடலில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.காலி, கராந்துவ பகுதியை சேர்ந்த அச்சிர சனேஸ் சமரசேகர என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.தனது 20 ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக உறவினர்களுடன் சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.உயிரிழந்த இளைஞனின் தந்தை தெரிவிக்கையில், “எனக்கு நான்கு பிள்ளைகள். உயிரிழந்தது எனது கடைசி மகன். அவர் கடந்த 29 ஆம் திகதி தனது 20 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார்.அதனை கொண்டாடுவதற்காக நாங்கள் கடற்கரை சென்றோம். அங்கு மகன் உறவினர்களுடன் பந்து விளையாடிக் கொண்டிருந்த போது பந்து கடலில் அடித்துச் செல்லப்பட்டது.அதைப் பிடிக்கச் சென்ற மகன் அலையில் இழுத்துச் செல்லப்பட்டார். அவரைக் காப்பாற்ற முயன்ற மேலும் இருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட போதிலும், பிரதேசவாசிகளின் உதவியுடன் அவர்கள் மீட்கப்பட்டனர்.ஆனால் எனது மகனை எங்களால் காப்பாற்ற முடியாமல் போனது. மகன் உயிரிழந்த இடத்திலேயே மறுநாள் அவரது சடலம் மிதந்த நிலையில் மீட்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.நீரில் மூழ்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement