பண்டிகை காலத்தை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குத் திரும்பும் மக்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில், இன்று (25) விசேட போக்குவரத்து சேவைகள் இயக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
அதன்படி 75 விசேட பேருந்து சேவைகள் இயக்கப்பட்டுள்ளதாக தலைமை செயற்பாட்டு அதிகாரி சங்க வீரசூரிய தெரிவித்தார்.
இந்த விசேட போக்குவரத்து சேவைகள் இம்மாதம் 27 ஆம் திகதி வரை தொடரும் என்று வீரசூரிய மேலும் கூறினார்.
இதற்கிடையில், பண்டிகை காலத்தில் சீரான போக்குவரத்தை எளிதாக்க கிட்டத்தட்ட 100 தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலன் மிராண்டா தெரிவித்தார்.
மேலும், பண்டிகை காலத்திற்கான விசேட ரயில் சேவைகளும் இன்று இயக்கப்படுவதாக ரயில்வே செயற்பாட்டு அதிகாரி அசங்க சமரசிங்க தெரிவித்தார்.
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை பண்டிகை காலத்தை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குத் திரும்பும் மக்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில், இன்று (25) விசேட போக்குவரத்து சேவைகள் இயக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.அதன்படி 75 விசேட பேருந்து சேவைகள் இயக்கப்பட்டுள்ளதாக தலைமை செயற்பாட்டு அதிகாரி சங்க வீரசூரிய தெரிவித்தார்.இந்த விசேட போக்குவரத்து சேவைகள் இம்மாதம் 27 ஆம் திகதி வரை தொடரும் என்று வீரசூரிய மேலும் கூறினார்.இதற்கிடையில், பண்டிகை காலத்தில் சீரான போக்குவரத்தை எளிதாக்க கிட்டத்தட்ட 100 தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலன் மிராண்டா தெரிவித்தார்.மேலும், பண்டிகை காலத்திற்கான விசேட ரயில் சேவைகளும் இன்று இயக்கப்படுவதாக ரயில்வே செயற்பாட்டு அதிகாரி அசங்க சமரசிங்க தெரிவித்தார்.