யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
யாழ்.கஸ்தூரியார் வீதி மற்றும் பெரிய கடை வீதி இணையும் சந்தியிலே ஹயேஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானது.
விபத்தில் ஹயேஸ் வாகனத்தில் பயணித்த நான்கு பேரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பேரும் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கிய ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் ஹயேஸ் - மோட்டார்சைக்கிள் விபத்தில் அறுவர் காயம் யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். யாழ்.கஸ்தூரியார் வீதி மற்றும் பெரிய கடை வீதி இணையும் சந்தியிலே ஹயேஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானது.விபத்தில் ஹயேஸ் வாகனத்தில் பயணித்த நான்கு பேரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பேரும் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்தில் சிக்கிய ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விபத்து சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.