• Apr 18 2026

கனடா பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: இலங்கை அரசாங்கம் இரங்கல்!

Chithra / Feb 12th 2026, 11:25 am
image


கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள பாடசாலையொன்றில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அந்நாட்டு அரசாங்கத்திற்கு தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பாக இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள அமைச்சர் விஜித ஹேரத்,

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு பாடசாலையில் நடந்த துயரமான துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் மிகவும் வருத்தமடைந்தேன். 

இலங்கை அரசு மற்றும் மக்கள் சார்பாக, தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். பாதிக்கப்பட்ட அனைவருடனும் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. 

இந்த ஆழ்ந்த கடினமான நேரத்தில் அவர்கள் வலிமை, ஆறுதல் மற்றும் அமைதியைப் பெறட்டும் – என்று கூறியுள்ளார்.

குறித்த பாடசாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடுகளில் சந்தேகநபர் உட்பட 10 பேர் உயிரிழந்துடன் 25 பேர் காயமடைந்துள்ளனர்.

பாடசாலைக்குள் நுழைந்து குறித்த பெண் நடத்திய துப்பாக்கிசூட்டில் 7பேர் உயிரிழந்துள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டினால் உயிரிழந்த மேலும் இருவரின் சடலங்கள் பாடசாலைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


கனடா பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: இலங்கை அரசாங்கம் இரங்கல் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள பாடசாலையொன்றில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அந்நாட்டு அரசாங்கத்திற்கு தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பாக இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.இது குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள அமைச்சர் விஜித ஹேரத்,கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு பாடசாலையில் நடந்த துயரமான துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் மிகவும் வருத்தமடைந்தேன். இலங்கை அரசு மற்றும் மக்கள் சார்பாக, தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். பாதிக்கப்பட்ட அனைவருடனும் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. இந்த ஆழ்ந்த கடினமான நேரத்தில் அவர்கள் வலிமை, ஆறுதல் மற்றும் அமைதியைப் பெறட்டும் – என்று கூறியுள்ளார்.குறித்த பாடசாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடுகளில் சந்தேகநபர் உட்பட 10 பேர் உயிரிழந்துடன் 25 பேர் காயமடைந்துள்ளனர்.பாடசாலைக்குள் நுழைந்து குறித்த பெண் நடத்திய துப்பாக்கிசூட்டில் 7பேர் உயிரிழந்துள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டினால் உயிரிழந்த மேலும் இருவரின் சடலங்கள் பாடசாலைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement