கிளிநொச்சியில் இன்று பாடசாலை மாணவர்களின் வருகை வீதம் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சியில் தருமபுரம் மத்திய கல்லூரி மற்றும் தர்மபுரம் ஆ.த.கா பாடசாலைகளில் மாணவர்களின் வரவுகளில் மிக கணிசமான அளவு குறைவாகவே காணப்பட்டது.
தீபாவளி பண்டிகைக்காக வடக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு நேற்று விடுமுறை வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்றும் விடுமுறை தினமா? என்ற கேள்வி ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் எழுந்ததால் அவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
மறுபுறம் நாட்டின் பல பாகங்களில் பெய்து வரும் கனமழை இன்று விடாது தொடர்ச்சியாக பெய்து வருகின்றது. இதனாலும் மாணவர்கள் பாடசாலைக்கு செல்லவில்லை என்றும் குறிப்பிடப்படுகின்றது.
கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்களின் வருகை குறைவு கிளிநொச்சியில் இன்று பாடசாலை மாணவர்களின் வருகை வீதம் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.கிளிநொச்சியில் தருமபுரம் மத்திய கல்லூரி மற்றும் தர்மபுரம் ஆ.த.கா பாடசாலைகளில் மாணவர்களின் வரவுகளில் மிக கணிசமான அளவு குறைவாகவே காணப்பட்டது. தீபாவளி பண்டிகைக்காக வடக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு நேற்று விடுமுறை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்றும் விடுமுறை தினமா என்ற கேள்வி ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் எழுந்ததால் அவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. மறுபுறம் நாட்டின் பல பாகங்களில் பெய்து வரும் கனமழை இன்று விடாது தொடர்ச்சியாக பெய்து வருகின்றது. இதனாலும் மாணவர்கள் பாடசாலைக்கு செல்லவில்லை என்றும் குறிப்பிடப்படுகின்றது.