யாழ்ப்பணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிராமத்தால் 500 மாணவர்கள் கல்வி கற்கும் யா.கரவெட்டி தேவரையாளி இந்துக் கல்லூரியின் கோரிக்கைக்கு அமைவாக பாடசாலையின் குடிநீர் பிரச்சினையை சீர் செய்வதற்காக 500,000 ரூபா நிதிப் பங்களிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் இன்று காலை கையளிக்கப்பட்டது.
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி செ.மோகனதாஸ் சுவாமிகள் அவர்களால் நேரடியாக சென்று கையளிக்கப்பட்டது.
இதே வேளை பளை பிரதேச சபை தூய்மை பணியாளர்கள் 15 பேருக்கு ரூபா 75,000 பெறுமதியான அத்தியவசியமான உணவுப் பொருட்களும் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பச்சிலை பள்ளி பிரதேச சபை தவிசாளர் சு.சுரேன் தலைமையில் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் செ.மோகனதாஸ் சுவாமிகள் நேரடியாக சென்று குறித்த உதவிகளை வழங்கிவைத்தர்.
இதில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை செயலாளர் ந.மோகனரூபன் , உப தவிசாளர் சி.செல்வராஜா, சமூக மருத்துவ உத்தியோகத்தர் மிரேஸ் திவேகா, சபை உறுப்பினர்கள், சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினர்கள், ஆச்சிரம தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
சந்நிதியான் ஆச்சிரமத்தால் கரவெட்டி தேவரையாளி பாடசாலைக்கு 500,000 ரூபா செலவில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் யாழ்ப்பணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிராமத்தால் 500 மாணவர்கள் கல்வி கற்கும் யா.கரவெட்டி தேவரையாளி இந்துக் கல்லூரியின் கோரிக்கைக்கு அமைவாக பாடசாலையின் குடிநீர் பிரச்சினையை சீர் செய்வதற்காக 500,000 ரூபா நிதிப் பங்களிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் இன்று காலை கையளிக்கப்பட்டது.சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி செ.மோகனதாஸ் சுவாமிகள் அவர்களால் நேரடியாக சென்று கையளிக்கப்பட்டது.இதே வேளை பளை பிரதேச சபை தூய்மை பணியாளர்கள் 15 பேருக்கு ரூபா 75,000 பெறுமதியான அத்தியவசியமான உணவுப் பொருட்களும் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.பச்சிலை பள்ளி பிரதேச சபை தவிசாளர் சு.சுரேன் தலைமையில் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் செ.மோகனதாஸ் சுவாமிகள் நேரடியாக சென்று குறித்த உதவிகளை வழங்கிவைத்தர்.இதில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை செயலாளர் ந.மோகனரூபன் , உப தவிசாளர் சி.செல்வராஜா, சமூக மருத்துவ உத்தியோகத்தர் மிரேஸ் திவேகா, சபை உறுப்பினர்கள், சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினர்கள், ஆச்சிரம தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.