• Jul 17 2026

வெற்றிலைப்பாக்குடன் புகையிலை விற்பனை செய்பவர்களுக்கு கடும் நடவடிக்கை; சட்டம் தீவிரமாக அமுல்

Chithra / Jul 17th 2026, 3:11 pm
image


வெற்றிலைப்பாக்குடன் புகையிலை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.


இன்று (17) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹண, 2006ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.


2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் முதல் அட்டவணையின்படி, நாட்டில் புகையற்ற புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


இந்தச் சட்டம் வெற்றிலைப்பாக்கு விற்பனையாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்காக அல்ல; மாறாக, வாய் புற்றுநோயிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காகவே இயற்றப்பட்டுள்ளதாக உபுல் ரோஹண வலியுறுத்தினார்.


இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 1,750 முதல் 1,900 வரையிலான புதிய வாய் புற்றுநோய் நோயாளர்கள் பதிவாகும் நிலையில், இந்த நோயின் தாக்கத்தை குறைக்கும் நோக்கில் குறித்த சட்டத்தை மீண்டும் தீவிரமாக அமுல்படுத்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.


இதன்படி, எதிர்காலத்தில் வெற்றிலைப்பாக்குடன் புகையிலை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளது.


புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டால், குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு 2,000 ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் அவர் எச்சரித்தார்.


மேலும், நாட்டில் நிலவும் கலாசார காரணங்களால் இதுவரை இந்தச் சட்டம் நேரடியாக அமுல்படுத்தப்படாமல், விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டதாகவும், பொதுமக்கள் தங்களைத் திருத்திக்கொள்ள போதிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் இனி சட்டம் எந்தத் தளர்வும் இன்றி அமுல்படுத்தப்படும் என்றும் உபுல் ரோஹண தெரிவித்தார்.

வெற்றிலைப்பாக்குடன் புகையிலை விற்பனை செய்பவர்களுக்கு கடும் நடவடிக்கை; சட்டம் தீவிரமாக அமுல் வெற்றிலைப்பாக்குடன் புகையிலை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.இன்று (17) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹண, 2006ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் முதல் அட்டவணையின்படி, நாட்டில் புகையற்ற புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.இந்தச் சட்டம் வெற்றிலைப்பாக்கு விற்பனையாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்காக அல்ல; மாறாக, வாய் புற்றுநோயிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காகவே இயற்றப்பட்டுள்ளதாக உபுல் ரோஹண வலியுறுத்தினார்.இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 1,750 முதல் 1,900 வரையிலான புதிய வாய் புற்றுநோய் நோயாளர்கள் பதிவாகும் நிலையில், இந்த நோயின் தாக்கத்தை குறைக்கும் நோக்கில் குறித்த சட்டத்தை மீண்டும் தீவிரமாக அமுல்படுத்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.இதன்படி, எதிர்காலத்தில் வெற்றிலைப்பாக்குடன் புகையிலை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளது.புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டால், குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு 2,000 ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் அவர் எச்சரித்தார்.மேலும், நாட்டில் நிலவும் கலாசார காரணங்களால் இதுவரை இந்தச் சட்டம் நேரடியாக அமுல்படுத்தப்படாமல், விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டதாகவும், பொதுமக்கள் தங்களைத் திருத்திக்கொள்ள போதிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் இனி சட்டம் எந்தத் தளர்வும் இன்றி அமுல்படுத்தப்படும் என்றும் உபுல் ரோஹண தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement