• Apr 15 2026

அதிநவீன வசதிகளுடன் சஃபாரி பேருந்து சேவையை ஆரம்பம்!

shanu / Apr 6th 2026, 2:54 pm
image

இயற்கை காட்சிகளை ரசிக்க ஏதுவாக அமைக்கப்பட்ட சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஹட்டன் SLTB பணிமனையால் வடிவமைக்கப்பட்ட இலங்கை போக்குவரத்து சபையின்  கூட்டுத்தாபனத்தின் சஃபாரி பேருந்து, (06) அன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.


ஹட்டன் SLTB பணிமனையின் பொறியியல் பிரிவால் வடிவமைக்கப்பட்ட சஃபாரி பேருந்து, நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுலா சுரவீர ஆராச்சி மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வி கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோரின் பங்கேற்புடன் சமய வழிப்பாட்டுடன்  ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் குறித்த பேருந்து சேவையில் ஆரம்பித்தது .


இரத்தமலான பணிமனையில் சேவையிலிருந்து நீக்கப்பட்டிருந்த இந்தப் பழைய பேருந்து ஹட்டன் பணிமனைக்குக் கொண்டுவரப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளுடனும் 42 இருக்கைகளுடன் ரூ. 4 மில்லியன் செலவில் இந்தப் பேருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.


மழைக்காலத்தில் மேல் கூரையுடனும், வறண்ட காலத்தில் கூரையின்றியும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சஃபாரி பேருந்தில், ஒலி அமைப்பு, கவர்ச்சிகரமான மின்விளக்குகள் மற்றும் பல நவீன டிஜிட்டல்  துணைக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. 


மேலும் இந்த SLTB சஃபாரி பேருந்தை நுவரெலியா மாவட்டத்திற்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ எந்தப் பயணத்திற்கும் SLTB கட்டணத்தில் முன்பதிவு செய்யலாம் என பணிமனை மேலாளர் திரு. பாலித வீரசூரிய இதன் போது  தெரிவித்தார்.


இந்தப் பேருந்திற்குத் தனி ஓட்டுநர் மற்றும் நடத்துநர் நியமிக்கப்பட்டுள்ளதோடு, சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடும் ஹட்டன் இரயில் நிலையத்திலிருந்து நல்லத்தன்னி  வரையிலான 2026-2027 ஆம் ஆண்டு ஸ்ரீ பாத மலை யாத்திரையில் இந்தப் பேருந்தையும் சேர்க்க பணிமனை நிர்வாக அதிகாரம் திட்டமிட்டுள்ளது.


சஃபாரி பேருந்து திறப்பு விழாவில் ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர, நுவரெலியா மாவட்ட SLTB பிரதம  மேலாளர் ஆர்.எம்.ஆர்.ஜே.பி. தசநாயக்க மற்றும் ஹட்டன் SLTB பணிமனையின் பல ஊழியர்கள் கலந்து கொண்டனர். 

அதிநவீன வசதிகளுடன் சஃபாரி பேருந்து சேவையை ஆரம்பம் இயற்கை காட்சிகளை ரசிக்க ஏதுவாக அமைக்கப்பட்ட சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஹட்டன் SLTB பணிமனையால் வடிவமைக்கப்பட்ட இலங்கை போக்குவரத்து சபையின்  கூட்டுத்தாபனத்தின் சஃபாரி பேருந்து, (06) அன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.ஹட்டன் SLTB பணிமனையின் பொறியியல் பிரிவால் வடிவமைக்கப்பட்ட சஃபாரி பேருந்து, நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுலா சுரவீர ஆராச்சி மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வி கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோரின் பங்கேற்புடன் சமய வழிப்பாட்டுடன்  ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் குறித்த பேருந்து சேவையில் ஆரம்பித்தது .இரத்தமலான பணிமனையில் சேவையிலிருந்து நீக்கப்பட்டிருந்த இந்தப் பழைய பேருந்து ஹட்டன் பணிமனைக்குக் கொண்டுவரப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளுடனும் 42 இருக்கைகளுடன் ரூ. 4 மில்லியன் செலவில் இந்தப் பேருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.மழைக்காலத்தில் மேல் கூரையுடனும், வறண்ட காலத்தில் கூரையின்றியும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சஃபாரி பேருந்தில், ஒலி அமைப்பு, கவர்ச்சிகரமான மின்விளக்குகள் மற்றும் பல நவீன டிஜிட்டல்  துணைக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த SLTB சஃபாரி பேருந்தை நுவரெலியா மாவட்டத்திற்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ எந்தப் பயணத்திற்கும் SLTB கட்டணத்தில் முன்பதிவு செய்யலாம் என பணிமனை மேலாளர் திரு. பாலித வீரசூரிய இதன் போது  தெரிவித்தார்.இந்தப் பேருந்திற்குத் தனி ஓட்டுநர் மற்றும் நடத்துநர் நியமிக்கப்பட்டுள்ளதோடு, சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடும் ஹட்டன் இரயில் நிலையத்திலிருந்து நல்லத்தன்னி  வரையிலான 2026-2027 ஆம் ஆண்டு ஸ்ரீ பாத மலை யாத்திரையில் இந்தப் பேருந்தையும் சேர்க்க பணிமனை நிர்வாக அதிகாரம் திட்டமிட்டுள்ளது.சஃபாரி பேருந்து திறப்பு விழாவில் ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர, நுவரெலியா மாவட்ட SLTB பிரதம  மேலாளர் ஆர்.எம்.ஆர்.ஜே.பி. தசநாயக்க மற்றும் ஹட்டன் SLTB பணிமனையின் பல ஊழியர்கள் கலந்து கொண்டனர். 

Advertisement

Advertisement

Advertisement