இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
முதல் பாகத்தைப் போலவே, இந்த படத்தையும் அவர் இயக்கி, இசையமைத்து, கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை குஷ்பு சுந்தரின் அவ்னி மூவிஸ் மற்றும் தயாரிப்பாளர் ஏ.சி.எஸ் அருண்குமாரின் பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கின்றன.
இப்படத்தில் ஆதியுடன் ஹர்ஷத் கான், சைத்ரா ஜே. ஆச்சார், கேத்திகா சர்மா, ரம்யா ரங்கநாதன், நாசர், கருணாஸ் மற்றும் ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், இப்படத்தின் 2வது சிங்கிள் பாடல் வரும் ஏப்ரல் 8ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே முதல் பாகம் பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்த இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது. புதிய பாடல் வெளியீடு அந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
மீசைய முறுக்கு 2" திரைப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.முதல் பாகத்தைப் போலவே, இந்த படத்தையும் அவர் இயக்கி, இசையமைத்து, கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தை குஷ்பு சுந்தரின் அவ்னி மூவிஸ் மற்றும் தயாரிப்பாளர் ஏ.சி.எஸ் அருண்குமாரின் பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தில் ஆதியுடன் ஹர்ஷத் கான், சைத்ரா ஜே. ஆச்சார், கேத்திகா சர்மா, ரம்யா ரங்கநாதன், நாசர், கருணாஸ் மற்றும் ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்நிலையில், ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், இப்படத்தின் 2வது சிங்கிள் பாடல் வரும் ஏப்ரல் 8ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.ஏற்கனவே முதல் பாகம் பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்த இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது. புதிய பாடல் வெளியீடு அந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.