• Oct 01 2026

மஸ்கெலியாவில் பல வருடங்களாக சீரமைக்கப்படாத வீதிகள் – மழையால் மக்கள் அவதி

Aathira / Oct 1st 2026, 7:47 am
image

நுவரெலியா மாவட்டம், மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பல வருடங்களாக சீரமைக்கப்படாத வீதிகள் காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாத சுவாமி ஆலயத்துக்குச் செல்லும் வீதி, ஸ்ரீ சுமனாராம விகாரை மற்றும் இஸ்லாமிய பள்ளிவாசலுக்குச் செல்லும் பிரதான வீதிகள், சென் ஜோசப் தேவாலயம் மற்றும் சமனெலிய மத்திய மகா வித்தியாலயத்துக்குச் செல்லும் வீதி என்பன நீண்ட காலமாக சீரமைக்கப்படாத நிலையில் உள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மஸ்கெலியா நகரிலிருந்து பிரதான நுழைவாயில் வழியாக சுமார் ஒரு கிலோமீற்றர் நீளமான பகுதி, தற்போது பாரிய அளவில் குன்றும் குழியுமாக காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், இப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் வீதியில் உள்ள குழிகளில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி நிற்பதால் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் பாதசாரிகள், பாடசாலை மாணவர்கள், வணக்கஸ்தலங்களுக்கு செல்லும் பக்தர்கள், மத குருமார்கள், பிரதேசவாசிகள் மற்றும் மிருக வைத்தியசாலைக்கு செல்லும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வீதி ஊடாக நாளாந்தம் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பாடசாலை மாணவர்கள் பயணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மழைக்காலங்களில் வீதியில் சகதியும் கழிவுநீரும் தேங்கி நிற்பதால், வாகனங்கள் செல்லும் போது அசுத்தமான நீர் பாதசாரிகள் மீது பீறிடுவதாகவும், இதனால் மாணவர்கள் குறிப்பாக வெள்ளை நிற சீருடைகளுடன் பாடசாலைக்கு செல்வதில் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தில் உடனடியாக கவனம் செலுத்தி, வீதிகளை சீரமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மஸ்கெலியாவில் பல வருடங்களாக சீரமைக்கப்படாத வீதிகள் – மழையால் மக்கள் அவதி நுவரெலியா மாவட்டம், மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பல வருடங்களாக சீரமைக்கப்படாத வீதிகள் காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாத சுவாமி ஆலயத்துக்குச் செல்லும் வீதி, ஸ்ரீ சுமனாராம விகாரை மற்றும் இஸ்லாமிய பள்ளிவாசலுக்குச் செல்லும் பிரதான வீதிகள், சென் ஜோசப் தேவாலயம் மற்றும் சமனெலிய மத்திய மகா வித்தியாலயத்துக்குச் செல்லும் வீதி என்பன நீண்ட காலமாக சீரமைக்கப்படாத நிலையில் உள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.மஸ்கெலியா நகரிலிருந்து பிரதான நுழைவாயில் வழியாக சுமார் ஒரு கிலோமீற்றர் நீளமான பகுதி, தற்போது பாரிய அளவில் குன்றும் குழியுமாக காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.இதற்கிடையில், இப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் வீதியில் உள்ள குழிகளில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி நிற்பதால் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.இதனால் பாதசாரிகள், பாடசாலை மாணவர்கள், வணக்கஸ்தலங்களுக்கு செல்லும் பக்தர்கள், மத குருமார்கள், பிரதேசவாசிகள் மற்றும் மிருக வைத்தியசாலைக்கு செல்லும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்த வீதி ஊடாக நாளாந்தம் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பாடசாலை மாணவர்கள் பயணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.மழைக்காலங்களில் வீதியில் சகதியும் கழிவுநீரும் தேங்கி நிற்பதால், வாகனங்கள் செல்லும் போது அசுத்தமான நீர் பாதசாரிகள் மீது பீறிடுவதாகவும், இதனால் மாணவர்கள் குறிப்பாக வெள்ளை நிற சீருடைகளுடன் பாடசாலைக்கு செல்வதில் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில், மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தில் உடனடியாக கவனம் செலுத்தி, வீதிகளை சீரமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement