வன்னி பிராந்தியத்தில் வவுனியா, மன்னார், மூல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கி விவசாயம், சுற்றுச்சூழல், நீர்ப்பாசனம் தொடர்பான கலந்துரையாடல் இன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.
நீண்ட காலமாக குறித்த மாவட்டங்களில் காணப்படும் வனஜீவராசிகள் மற்றும் வன இலாகா திணைக்களத்தால் மக்கள் வாழும் இடங்களை ஆக்கிரமித்து கையகப்படுத்தும் செயற்பாடுகள் மற்றும் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்குவதில் ஏற்படுகின்ற தாமதங்களால் ஏற்படுகின்ற விவசாய பிரச்சினைகள் நீர்ப்பாசன குளங்களில் ஏற்படுகின்ற பிரச்சினைகள், மகாவலி அதிகாரசபையால் குறித்த மாவட்டங்களில் கையகப்படுத்தப்படும் காணிகள் உட்பட பல்வேறு விடயங்கள் இதனூடாக கலந்துரையாடப்பட்டிருந்தது.
விவசாய மற்றும் நீரியல் வள அமைச்சர் கே டி லால் காந்த, சுற்றுச்சூழல் அமைச்சர் தமிக்க பட்ட பந்தி, விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, மாவட்ட கூட்டுறவு பிரதி அமைச்சர் உபபால் சமரசிங்க உட்பட வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கே. காதர் மஸ்தான், ம. ஜெகதீஸ்வரன், து. ரவிகரன், ப. சத்தியலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை வவுனியா , முலலைத்தீவு அரசாங்க அதிபர்கள், அமைச்சுக்களின் உயர் அதிகாரிகள் திணைக்களின் உயர்மட்ட அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் என வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கி கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
விவசாய நீரியல் மற்றும் சுற்றாடல் அமைச்சுக்களின் விடயதானங்கள் ஆராய்வு வன்னி பிராந்தியத்தில் வவுனியா, மன்னார், மூல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கி விவசாயம், சுற்றுச்சூழல், நீர்ப்பாசனம் தொடர்பான கலந்துரையாடல் இன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.நீண்ட காலமாக குறித்த மாவட்டங்களில் காணப்படும் வனஜீவராசிகள் மற்றும் வன இலாகா திணைக்களத்தால் மக்கள் வாழும் இடங்களை ஆக்கிரமித்து கையகப்படுத்தும் செயற்பாடுகள் மற்றும் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்குவதில் ஏற்படுகின்ற தாமதங்களால் ஏற்படுகின்ற விவசாய பிரச்சினைகள் நீர்ப்பாசன குளங்களில் ஏற்படுகின்ற பிரச்சினைகள், மகாவலி அதிகாரசபையால் குறித்த மாவட்டங்களில் கையகப்படுத்தப்படும் காணிகள் உட்பட பல்வேறு விடயங்கள் இதனூடாக கலந்துரையாடப்பட்டிருந்தது.விவசாய மற்றும் நீரியல் வள அமைச்சர் கே டி லால் காந்த, சுற்றுச்சூழல் அமைச்சர் தமிக்க பட்ட பந்தி, விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, மாவட்ட கூட்டுறவு பிரதி அமைச்சர் உபபால் சமரசிங்க உட்பட வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கே. காதர் மஸ்தான், ம. ஜெகதீஸ்வரன், து. ரவிகரன், ப. சத்தியலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.இதேவேளை வவுனியா , முலலைத்தீவு அரசாங்க அதிபர்கள், அமைச்சுக்களின் உயர் அதிகாரிகள் திணைக்களின் உயர்மட்ட அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் என வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கி கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.