A9 வீதியின் தாண்டிக்குளம் முதல் பறநட்டகல் வரையான பகுதியில் பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறாக அமைந்திருந்த அனுமதியற்ற விளம்பரப் பலகைகள் மற்றும் தற்காலிகக் கடைகள் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால் அகற்றப்பட்டுள்ளன.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் அவர்களின் தலைமையில், சபையின் ஊழியர்களால் இந்த விசேட அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சபையின் எவ்வித முன்அனுமதியுமின்றி நிறுவப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள் மற்றும் வீதிப் பாதசாரிகளுக்கு இடையூறாக அமைக்கப்பட்டிருந்த கடைகளே இவ்வாறு அகற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்வதோடு, வீதி ஒழுங்கையும் பாதுகாப்பதே இந்நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என பிரதேச சபை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பொது இடங்களை முறையான அனுமதியோடு பயன்படுத்துமாறும், வீதிப் பாதுகாப்பிற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பிரதேச சபை மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.
வவுனியா தாண்டிக்குளம் பறநட்டகல் A9 வீதியில் அனுமதியற்ற விளம்பரப் பலகைகள் மற்றும் கடைகள் அகற்றம் A9 வீதியின் தாண்டிக்குளம் முதல் பறநட்டகல் வரையான பகுதியில் பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறாக அமைந்திருந்த அனுமதியற்ற விளம்பரப் பலகைகள் மற்றும் தற்காலிகக் கடைகள் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால் அகற்றப்பட்டுள்ளன.வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் அவர்களின் தலைமையில், சபையின் ஊழியர்களால் இந்த விசேட அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.சபையின் எவ்வித முன்அனுமதியுமின்றி நிறுவப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள் மற்றும் வீதிப் பாதசாரிகளுக்கு இடையூறாக அமைக்கப்பட்டிருந்த கடைகளே இவ்வாறு அகற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.பொதுமக்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்வதோடு, வீதி ஒழுங்கையும் பாதுகாப்பதே இந்நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என பிரதேச சபை நிர்வாகம் தெரிவித்துள்ளது.பொது இடங்களை முறையான அனுமதியோடு பயன்படுத்துமாறும், வீதிப் பாதுகாப்பிற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பிரதேச சபை மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.