• Apr 21 2026

நாட்டில் இன்று சூரியன் உச்சம் கொடுக்கவுள்ள பிரதேசங்கள்; வடகிழக்கு மக்களுக்கு வந்த எச்சரிக்கை

Chithra / Apr 9th 2026, 7:46 am
image

சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று மதியம் சுமார் 12.12 மணியளவில் சிலாபம், விங்கிரிய, ஹல்மில்லவெவ, படுவஸ்நுவர, கொகரெல்ல, கவுடுபெலல்ல, கொப்பவெலி மற்றும் கிரான்குளம் போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ, மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும்.


மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 


சிலாபம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


கடல் பிராந்தியங்களில்  மணித்தியாலத்திற்கு 20 - 30 km  வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். 


காலி தொடக்கம் மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு  40 - 45  km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.


இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.


இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.  

நாட்டில் இன்று சூரியன் உச்சம் கொடுக்கவுள்ள பிரதேசங்கள்; வடகிழக்கு மக்களுக்கு வந்த எச்சரிக்கை சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று மதியம் சுமார் 12.12 மணியளவில் சிலாபம், விங்கிரிய, ஹல்மில்லவெவ, படுவஸ்நுவர, கொகரெல்ல, கவுடுபெலல்ல, கொப்பவெலி மற்றும் கிரான்குளம் போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ, மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும்.மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சிலாபம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.கடல் பிராந்தியங்களில்  மணித்தியாலத்திற்கு 20 - 30 km  வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். காலி தொடக்கம் மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு  40 - 45  km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.  

Advertisement

Advertisement

Advertisement