"இளைஞர்கள் மத்தியில் மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரத்தை கட்டியெழுப்புதல்" திட்டத்தின் கீழ் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான பரிந்துரை மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிப் பட்டறை இன்று (02) முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது.
எழுத்தாணி பவுண்டேஷன் முன்னெடுத்து வரும் இப்பயிற்சிப் பட்டறையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம், புதுக்குடியிருப்பு பிரதேச சபை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆகியவற்றை சேர்ந்த சுமார் 30 அரச உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
பயிற்சிப் பட்டறையின் வளவாளராக சமூக அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பயிற்றுவிப்பாளரான வே. காண்டீபன் செயற்பட்டார். நிகழ்வில் எழுத்தாணி பவுண்டேஷனின் நிறைவேற்று பணிப்பாளர் வடமலை ராஜ்குமார், நிதி மற்றும் நிர்வாக முகாமையாளர் சுல்பிகா சம்சுதீன், முல்லைத்தீவு மாவட்ட மனித உரிமைகள் பாதுகாப்பு உத்தியோகத்தர் பா. சதீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பயிற்சியின் போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் சமூக மட்ட பிரதிநிதிகளுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில் பெறப்பட்ட கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் ஆராயப்பட்டன. குறிப்பாக, மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரத்தை மேம்படுத்துவதில் அரச உத்தியோகத்தர்களின் பங்களிப்பை வலுப்படுத்துதல், சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வை அதிகரித்தல் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேலும் பயனுள்ளதாக மாற்றுதல் தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
மேலும், பல இன மற்றும் மதங்களை சேர்ந்த மக்களிடையே நல்லிணக்கம், பரஸ்பர மரியாதை மற்றும் சமூக ஒற்றுமையை வளர்ப்பதில் அரச நிறுவனங்களின் பங்கு குறித்து கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெற்றன.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த மாதம் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகம் அதிகாரிகளுக்காகவும் இதேபோன்ற பயிற்சிப் பட்டறை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதுக்குடியிருப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கான பரிந்துரை பயிற்சிப் பட்டறை "இளைஞர்கள் மத்தியில் மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரத்தை கட்டியெழுப்புதல்" திட்டத்தின் கீழ் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான பரிந்துரை மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிப் பட்டறை இன்று (02) முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது.எழுத்தாணி பவுண்டேஷன் முன்னெடுத்து வரும் இப்பயிற்சிப் பட்டறையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம், புதுக்குடியிருப்பு பிரதேச சபை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆகியவற்றை சேர்ந்த சுமார் 30 அரச உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.பயிற்சிப் பட்டறையின் வளவாளராக சமூக அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பயிற்றுவிப்பாளரான வே. காண்டீபன் செயற்பட்டார். நிகழ்வில் எழுத்தாணி பவுண்டேஷனின் நிறைவேற்று பணிப்பாளர் வடமலை ராஜ்குமார், நிதி மற்றும் நிர்வாக முகாமையாளர் சுல்பிகா சம்சுதீன், முல்லைத்தீவு மாவட்ட மனித உரிமைகள் பாதுகாப்பு உத்தியோகத்தர் பா. சதீசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பயிற்சியின் போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் சமூக மட்ட பிரதிநிதிகளுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில் பெறப்பட்ட கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் ஆராயப்பட்டன. குறிப்பாக, மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரத்தை மேம்படுத்துவதில் அரச உத்தியோகத்தர்களின் பங்களிப்பை வலுப்படுத்துதல், சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வை அதிகரித்தல் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேலும் பயனுள்ளதாக மாற்றுதல் தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.மேலும், பல இன மற்றும் மதங்களை சேர்ந்த மக்களிடையே நல்லிணக்கம், பரஸ்பர மரியாதை மற்றும் சமூக ஒற்றுமையை வளர்ப்பதில் அரச நிறுவனங்களின் பங்கு குறித்து கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெற்றன.இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த மாதம் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலகம் அதிகாரிகளுக்காகவும் இதேபோன்ற பயிற்சிப் பட்டறை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.