• Oct 14 2026

அனோஜனுக்கு மறுவாழ்வு – இலங்கையில் ஒலிக்கும் மகிழ்ச்சிக் குரல்கள்!

Chithra / Oct 14th 2026, 1:19 pm
image


சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைப் பொறியாளர் அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை இரத்து செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கையில் அரசியல்வாதிகள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.


கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்தவரும், சவூதி அரேபியாவுக்குப் பணிக்காகச் சென்றவருமான அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இரத்து செய்துள்ளமை இலங்கைக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.


இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக உழைத்த அனைவருக்கும் தனது நன்றிகளையும் மரியாதையையும் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.


குறிப்பாக, அனோஜனின் உயிர் வாழும் உரிமையை உறுதிப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பைசர் முஸ்தபா, உபுல் குமாரப்பெரும உள்ளிட்ட சட்டத்தரணிகளுக்கும், இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.


மேலும், அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்காகத் தானும் தனது குழுவினரும் தங்களால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்ததாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.


அவரது உயிரைக் காப்பாற்ற முடிந்தமை மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ள அவர், இந்தத் தீர்மானத்திற்காக சவூதி அரேபிய உச்ச நீதிமன்றத்திற்கும் அந்நாட்டு மன்னருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை இரத்து செய்யப்பட்டுள்ளமை முழு நாட்டிற்கும் நிம்மதியளிக்கும் செய்தியாக அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


இந்தத் தீர்மானத்திற்காக சவூதி அரேபியாவுக்கும் அந்நாட்டு இளவரசர் சல்மானுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன், அதிகாரத்தில் உள்ள அரசாங்கம் என்ற வகையில் இலங்கை அரசு தனது பொறுப்பை நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அனோஜனின் உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் இலங்கையின் அனைத்து அரசியல் கட்சிகளும், சிவில் சமூக அமைப்புகளும், பொதுமக்களும் தங்களுக்கிடையிலான வேறுபாடுகளைக் கடந்து ஒன்றிணைந்து செயற்பட்டதாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


இது ஒரு நாடு என்ற வகையில் இலங்கைக்குக் கிடைத்த முதல் வெற்றி எனவும் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.


இதேவேளை சவூதி அரேபியாவில் சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை இரத்துச் செய்வதற்கான தீர்மானத்தைத் தொடர்ந்து, அவரது வழக்கில் ஏற்பட்டுள்ள சாதகமான முன்னேற்றத்தை தாம் மனப்பூர்வமாக வரவேற்பதாக இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.


இந்த முக்கியமான முன்னேற்றத்தை நாம் வரவேற்கின்ற அதேவேளை, எமது முயற்சிகள் இத்துடன் முடிவடையவில்லை. 


தேவையான அனைத்து சட்ட நடைமுறைகளும் உரிய சட்டச் செயல்முறைகளும் முழுமையாக நிறைவு செய்யப்பட்டு, சிவராசா அனோஜன் பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு, அவரது குடும்பத்தினருடன் மீண்டும் இணைக்கப்படும் நாளிலேயே எமது முயற்சி முழுமை பெறும்.


சம்பந்தப்பட்ட சட்டங்களுக்கும் சட்ட நடைமுறைகளுக்கும் அமைவாக, அவரை இயன்றளவு விரைவாகப் பாதுகாப்பாக நாடு திரும்பச் செய்வதற்காக இலங்கை மற்றும் சவூதி அரேபிய அதிகாரிகள் தங்களுக்கிடையிலான ஆக்கபூர்வமான ஒத்துழைப்பைத் தொடர்ந்து முன்னெடுப்பார்கள் என நான் மனப்பூர்வமாக நம்புகின்றேன் என  குறிப்பிட்டுள்ளார்.


அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை இரத்து செய்யப்பட்டுள்ள செய்தி அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் பெரும் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

அனோஜனுக்கு மறுவாழ்வு – இலங்கையில் ஒலிக்கும் மகிழ்ச்சிக் குரல்கள் சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைப் பொறியாளர் அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை இரத்து செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கையில் அரசியல்வாதிகள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்தவரும், சவூதி அரேபியாவுக்குப் பணிக்காகச் சென்றவருமான அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இரத்து செய்துள்ளமை இலங்கைக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக உழைத்த அனைவருக்கும் தனது நன்றிகளையும் மரியாதையையும் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.குறிப்பாக, அனோஜனின் உயிர் வாழும் உரிமையை உறுதிப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பைசர் முஸ்தபா, உபுல் குமாரப்பெரும உள்ளிட்ட சட்டத்தரணிகளுக்கும், இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.மேலும், அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்காகத் தானும் தனது குழுவினரும் தங்களால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்ததாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.அவரது உயிரைக் காப்பாற்ற முடிந்தமை மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ள அவர், இந்தத் தீர்மானத்திற்காக சவூதி அரேபிய உச்ச நீதிமன்றத்திற்கும் அந்நாட்டு மன்னருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.இதேவேளை, அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை இரத்து செய்யப்பட்டுள்ளமை முழு நாட்டிற்கும் நிம்மதியளிக்கும் செய்தியாக அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.இந்தத் தீர்மானத்திற்காக சவூதி அரேபியாவுக்கும் அந்நாட்டு இளவரசர் சல்மானுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், அதிகாரத்தில் உள்ள அரசாங்கம் என்ற வகையில் இலங்கை அரசு தனது பொறுப்பை நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அனோஜனின் உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் இலங்கையின் அனைத்து அரசியல் கட்சிகளும், சிவில் சமூக அமைப்புகளும், பொதுமக்களும் தங்களுக்கிடையிலான வேறுபாடுகளைக் கடந்து ஒன்றிணைந்து செயற்பட்டதாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.இது ஒரு நாடு என்ற வகையில் இலங்கைக்குக் கிடைத்த முதல் வெற்றி எனவும் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.இதேவேளை சவூதி அரேபியாவில் சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை இரத்துச் செய்வதற்கான தீர்மானத்தைத் தொடர்ந்து, அவரது வழக்கில் ஏற்பட்டுள்ள சாதகமான முன்னேற்றத்தை தாம் மனப்பூர்வமாக வரவேற்பதாக இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.இந்த முக்கியமான முன்னேற்றத்தை நாம் வரவேற்கின்ற அதேவேளை, எமது முயற்சிகள் இத்துடன் முடிவடையவில்லை. தேவையான அனைத்து சட்ட நடைமுறைகளும் உரிய சட்டச் செயல்முறைகளும் முழுமையாக நிறைவு செய்யப்பட்டு, சிவராசா அனோஜன் பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு, அவரது குடும்பத்தினருடன் மீண்டும் இணைக்கப்படும் நாளிலேயே எமது முயற்சி முழுமை பெறும்.சம்பந்தப்பட்ட சட்டங்களுக்கும் சட்ட நடைமுறைகளுக்கும் அமைவாக, அவரை இயன்றளவு விரைவாகப் பாதுகாப்பாக நாடு திரும்பச் செய்வதற்காக இலங்கை மற்றும் சவூதி அரேபிய அதிகாரிகள் தங்களுக்கிடையிலான ஆக்கபூர்வமான ஒத்துழைப்பைத் தொடர்ந்து முன்னெடுப்பார்கள் என நான் மனப்பூர்வமாக நம்புகின்றேன் என  குறிப்பிட்டுள்ளார்.அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை இரத்து செய்யப்பட்டுள்ள செய்தி அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் பெரும் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement