• Sep 25 2026

கீரிமலை சுண்ணக்கல் அகழ்வுப் பள்ளங்களில் கழிவுகள் கொட்டப்படுவதற்கு முற்றுப்புள்ளி

Aathira / Sep 25th 2026, 11:39 am
image

கீரிமலை பிரதேசத்தில் கடந்த காலங்களில் சுண்ணக்கல் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய பள்ளங்களில் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டை உடனடியாகக் கட்டுப்படுத்தும் வகையில், கழிவுகளை இயந்திரங்களைப் பயன்படுத்தி விரைவாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை விடுத்துள்ளார்.

கீரிமலை பிரதேசத்தில் கழிவுகள் குவிக்கப்பட்டுள்ள பகுதிகளை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேற்று வியாழக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.

இதன்போது, அந்தப் பகுதி மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதை அவதானித்த ஆளுநர், 'இது மிகப்பெரிய அனர்த்தமாகும்' எனக் குறிப்பிட்டதுடன், இந்தப் பகுதியில் தொடர்ந்து கழிவுகள் கொட்டப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார்.

மனித வளத்தை மாத்திரம் பயன்படுத்தி கழிவுகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் போதிய வேகத்தில் இடம்பெறவில்லை என்று குறிப்பிட்ட ஆளுநர், இயந்திரங்களைப் பயன்படுத்தி கழிவுகளைத் துரிதமாக அகற்றுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்குப் பணிப்புரை விடுத்தார்.

அத்துடன், எதிர்காலத்தில் இந்தப் பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு கண்காணிப்பு கமராக்களைப் பொருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆளுநர் அறிவுறுத்தினார்.

இதேவேளை, வலிகாமம் தெற்கு பிரதேச சபையால் அந்தப் பகுதியில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை விரைவாக அகற்ற நடவடிக்கை எடுப்பதாக வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தி.பிரகாஸ் ஆளுநரிடம் உறுதியளித்தார்.

அத்துடன், தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையிலிருந்து அந்தப் பகுதியில் கொட்டப்பட்டிருந்த கழிவுகள் தற்போது அகற்றப்பட்டுவிட்டன என்று அங்கு கடமையாற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஆளுநருக்குத் தெரியப்படுத்தினார்.

இதன்போது, மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகளை தமது சபையால் ஏற்றிச் செல்வதில்லை என்று வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார்.

கீரிமலை பிரதேசத்தில் காணப்படும் இந்த நிலைமை தொடர்பில் தொடர்ந்து கண்காணிப்பை மேற்கொண்டு, மக்கள் சுகாதாரத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஆளுநர் வலியுறுத்தினார்.

இந்தக் கண்காணிப்பு பயணத்தின்போது வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், யாழ்ப்பாணம் மாவட்டப் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபைகளின் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

கீரிமலை சுண்ணக்கல் அகழ்வுப் பள்ளங்களில் கழிவுகள் கொட்டப்படுவதற்கு முற்றுப்புள்ளி கீரிமலை பிரதேசத்தில் கடந்த காலங்களில் சுண்ணக்கல் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய பள்ளங்களில் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டை உடனடியாகக் கட்டுப்படுத்தும் வகையில், கழிவுகளை இயந்திரங்களைப் பயன்படுத்தி விரைவாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை விடுத்துள்ளார்.கீரிமலை பிரதேசத்தில் கழிவுகள் குவிக்கப்பட்டுள்ள பகுதிகளை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேற்று வியாழக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.இதன்போது, அந்தப் பகுதி மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதை அவதானித்த ஆளுநர், 'இது மிகப்பெரிய அனர்த்தமாகும்' எனக் குறிப்பிட்டதுடன், இந்தப் பகுதியில் தொடர்ந்து கழிவுகள் கொட்டப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார்.மனித வளத்தை மாத்திரம் பயன்படுத்தி கழிவுகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் போதிய வேகத்தில் இடம்பெறவில்லை என்று குறிப்பிட்ட ஆளுநர், இயந்திரங்களைப் பயன்படுத்தி கழிவுகளைத் துரிதமாக அகற்றுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்குப் பணிப்புரை விடுத்தார்.அத்துடன், எதிர்காலத்தில் இந்தப் பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு கண்காணிப்பு கமராக்களைப் பொருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆளுநர் அறிவுறுத்தினார்.இதேவேளை, வலிகாமம் தெற்கு பிரதேச சபையால் அந்தப் பகுதியில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை விரைவாக அகற்ற நடவடிக்கை எடுப்பதாக வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தி.பிரகாஸ் ஆளுநரிடம் உறுதியளித்தார்.அத்துடன், தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையிலிருந்து அந்தப் பகுதியில் கொட்டப்பட்டிருந்த கழிவுகள் தற்போது அகற்றப்பட்டுவிட்டன என்று அங்கு கடமையாற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஆளுநருக்குத் தெரியப்படுத்தினார்.இதன்போது, மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகளை தமது சபையால் ஏற்றிச் செல்வதில்லை என்று வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார்.கீரிமலை பிரதேசத்தில் காணப்படும் இந்த நிலைமை தொடர்பில் தொடர்ந்து கண்காணிப்பை மேற்கொண்டு, மக்கள் சுகாதாரத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஆளுநர் வலியுறுத்தினார்.இந்தக் கண்காணிப்பு பயணத்தின்போது வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், யாழ்ப்பாணம் மாவட்டப் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபைகளின் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

Advertisement

Advertisement

Advertisement