மட்டக்களப்பு விவசாயிகளுக்குத் தேவையான உரம் இருவரை வழங்கப்படவில்லை. அவர்களுக்கான தீர்வு வழங்காவிடின் வீதியில் இறங்கிப் போராடுவோம் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பில் விவசாயத்திற்கு உரம் வழங்கவில்லை.. இதற்கு தீர்வு எட்டப்படவில்லை. தனியார் ஊடாகவே பொதுமக்கள் உரத்தை வாங்க வேண்டும்
இதனால் முழுமையாக விவசாயம் அழிந்து போகும். அறுவடை விளைச்சலுக்கு 100 கிலே தேவைப்படுகிறது.
35 நாட்கள் கடந்துள்ளது. 60 நாட்கள் கடந்தால் விவசாயம் முழுவதும் அழிந்துபோகும்.
டித்வாவால் குறைந்தளவு பாதிக்கப்பட்டோருக்கு இதுவரை நஷ்ட ஈடு வழங்கவில்லை.
தென்னைமரம் பாதிப்பும் அதிகளவு ஏற்பட்டுள்ளது. இதற்கான தீர்வு வழங்காவிடின் விவசாயிகள் வீதியில் இறங்கிப் போராடுவார்கள். அவர்களுக்கு ஆதரவாக நாங்களும் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவோம் எனத் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விரைவாகத் தீர்வு பெற்றுக்கொடுப்போம் எனத் தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு தீர்வு வழங்காவிடின் போராட்டம் வெடிக்கும் - சபையில் சாணக்கியன் மட்டக்களப்பு விவசாயிகளுக்குத் தேவையான உரம் இருவரை வழங்கப்படவில்லை. அவர்களுக்கான தீர்வு வழங்காவிடின் வீதியில் இறங்கிப் போராடுவோம் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பில் விவசாயத்திற்கு உரம் வழங்கவில்லை. இதற்கு தீர்வு எட்டப்படவில்லை. தனியார் ஊடாகவே பொதுமக்கள் உரத்தை வாங்க வேண்டும்இதனால் முழுமையாக விவசாயம் அழிந்து போகும். அறுவடை விளைச்சலுக்கு 100 கிலே தேவைப்படுகிறது. 35 நாட்கள் கடந்துள்ளது. 60 நாட்கள் கடந்தால் விவசாயம் முழுவதும் அழிந்துபோகும். டித்வாவால் குறைந்தளவு பாதிக்கப்பட்டோருக்கு இதுவரை நஷ்ட ஈடு வழங்கவில்லை. தென்னைமரம் பாதிப்பும் அதிகளவு ஏற்பட்டுள்ளது. இதற்கான தீர்வு வழங்காவிடின் விவசாயிகள் வீதியில் இறங்கிப் போராடுவார்கள். அவர்களுக்கு ஆதரவாக நாங்களும் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவோம் எனத் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விரைவாகத் தீர்வு பெற்றுக்கொடுப்போம் எனத் தெரிவித்தார்.