• Apr 28 2026

ஜனாதிபதியின் விசேட பொருளாதாரக் குழு கூட்டம் - எரிபொருள் மற்றும் வர்த்தகத் தொடர்புகள் குறித்து அவதானம்!

shanu / Mar 11th 2026, 4:40 pm
image

வெளிப்புற அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், பிரஜைகளின் நலனை உறுதி செய்வதற்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் முன்மொழிவுக்கு இணங்க நிறுவப்பட்டுள்ள பொருளாதாரக் கண்காணிப்புக் குழு, நேற்று செவ்வாய்க்கிழமை மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.


தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமையிலான இந்தக் குழுவில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் (நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள்)  ரசல் அபொன்சு  செயலாளராகவும் அழைப்பாளராகவும் செயற்படுகின்றார்.


மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க, திறைசேரிச் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்களான ஹான்ஸ் விஜயசூரிய மற்றும் துமிந்த ஹுலங்கமுவ, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை  அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்  திலகா ஜயசுந்தர,  இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ஏ.எஸ். டி எஸ். ராஜகருணா,  லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் தலைவர்  சன்ன குணவர்தன, இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் கலாநிதி பராக்கிரம திஸாநாயக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க, வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ஹனீப் யூசுப், இலங்கை தேயிலை சபையின்   தலைவர்  ஆர்.கே. ஒபேசேகர, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் புத்திக ஹேவாவசம்,  வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சின் மேலதிக செயலாளர் (பொருளாதார விவகாரங்கள்) உள்ளிட்டோர் இந்தக் குழுவின் உறுப்பினர்களாகச் செயற்படுகின்றனர்.


தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலினால் ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதார ஸ்திரமற்ற தன்மையால், இலங்கைப் பொருளாதாரத்துக்கு ஏற்படக்கூடிய  மோசமான பாதிப்புகள் மற்றும் அந்த நிலைமையில் சந்தை நிலைமையை ஸ்திரப்படுத்தல் மற்றும் பிரஜைகளின் பாதுகாப்புக்கு மேற்கொள்ள வேண்டிய துரித நடவடிக்கை  குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.


ஒரு சிறிய திறந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாடு என்ற ரீதியில், வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் மற்றும் அந்த வலய நாடுகளுடனான வர்த்தகத் தொடர்புகள்  மற்றும் முதலீடு என்பவற்றிலே  எரிபொருள் இறக்குமதி  தங்கியுள்ளது. அதனால்  இலங்கைக்கு வெளிப்புற பொருளாதார அதிர்வுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் எச்சரிக்கை  மற்றும் அவற்றை  தொடர்ச்சியாக கண்காணித்து மேற்கொள்ள வேண்டிய முக்கியமான   கொள்கை ரீதியான நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது.

ஜனாதிபதியின் விசேட பொருளாதாரக் குழு கூட்டம் - எரிபொருள் மற்றும் வர்த்தகத் தொடர்புகள் குறித்து அவதானம் வெளிப்புற அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், பிரஜைகளின் நலனை உறுதி செய்வதற்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் முன்மொழிவுக்கு இணங்க நிறுவப்பட்டுள்ள பொருளாதாரக் கண்காணிப்புக் குழு, நேற்று செவ்வாய்க்கிழமை மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமையிலான இந்தக் குழுவில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் (நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள்)  ரசல் அபொன்சு  செயலாளராகவும் அழைப்பாளராகவும் செயற்படுகின்றார்.மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க, திறைசேரிச் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்களான ஹான்ஸ் விஜயசூரிய மற்றும் துமிந்த ஹுலங்கமுவ, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை  அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்  திலகா ஜயசுந்தர,  இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ஏ.எஸ். டி எஸ். ராஜகருணா,  லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் தலைவர்  சன்ன குணவர்தன, இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் கலாநிதி பராக்கிரம திஸாநாயக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க, வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ஹனீப் யூசுப், இலங்கை தேயிலை சபையின்   தலைவர்  ஆர்.கே. ஒபேசேகர, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் புத்திக ஹேவாவசம்,  வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சின் மேலதிக செயலாளர் (பொருளாதார விவகாரங்கள்) உள்ளிட்டோர் இந்தக் குழுவின் உறுப்பினர்களாகச் செயற்படுகின்றனர்.தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலினால் ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதார ஸ்திரமற்ற தன்மையால், இலங்கைப் பொருளாதாரத்துக்கு ஏற்படக்கூடிய  மோசமான பாதிப்புகள் மற்றும் அந்த நிலைமையில் சந்தை நிலைமையை ஸ்திரப்படுத்தல் மற்றும் பிரஜைகளின் பாதுகாப்புக்கு மேற்கொள்ள வேண்டிய துரித நடவடிக்கை  குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.ஒரு சிறிய திறந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாடு என்ற ரீதியில், வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் மற்றும் அந்த வலய நாடுகளுடனான வர்த்தகத் தொடர்புகள்  மற்றும் முதலீடு என்பவற்றிலே  எரிபொருள் இறக்குமதி  தங்கியுள்ளது. அதனால்  இலங்கைக்கு வெளிப்புற பொருளாதார அதிர்வுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் எச்சரிக்கை  மற்றும் அவற்றை  தொடர்ச்சியாக கண்காணித்து மேற்கொள்ள வேண்டிய முக்கியமான   கொள்கை ரீதியான நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement