• Jun 09 2026

கால் மடிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட எலும்புக்கூடு; 300 ஐத் தாண்டிய அவலம்!

shanu / Jun 8th 2026, 8:47 pm
image

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இன்று 16 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி  வி.நிரஞ்சன் தெரிவித்துள்ளாார். 


செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் 3ஆம் கட்டத்தின்  19 ஆம் நாள் அகழ்வுப் பணிகள் யாழ்.நிதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இன்று  முன்னெடுக்கப்பட்டது. 


இன்றைய அகழ்வில் இன்று புதிதாக 4 மனித எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டதோடு  

16 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டன. அதனடிப்படையில் இன்றுவரை மொத்தமாக  302 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்தார்.


றுகுணு பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் அகழ்வுப்பணி மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. 


அகழ்வின்போது தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள்,சட்டத்தரணிகள், துறை சார் நிபுணர்கள் பங்கேற்றனர். 


கால் மடிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட எலும்புக்கூடு; 300 ஐத் தாண்டிய அவலம் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இன்று 16 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி  வி.நிரஞ்சன் தெரிவித்துள்ளாார். செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் 3ஆம் கட்டத்தின்  19 ஆம் நாள் அகழ்வுப் பணிகள் யாழ்.நிதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இன்று  முன்னெடுக்கப்பட்டது. இன்றைய அகழ்வில் இன்று புதிதாக 4 மனித எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டதோடு  16 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டன. அதனடிப்படையில் இன்றுவரை மொத்தமாக  302 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்தார்.றுகுணு பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் அகழ்வுப்பணி மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. அகழ்வின்போது தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள்,சட்டத்தரணிகள், துறை சார் நிபுணர்கள் பங்கேற்றனர். 

Advertisement

Advertisement

Advertisement