• Oct 19 2026

யாழ்., வவுனியா, முல்லைத்தீவு மக்களே அவதானம்! நாளை வரை நீடிக்கும் அபாயம்!

Chithra / Oct 18th 2026, 1:22 pm
image


நாட்டின் ஆறு மாகாணங்கள் மற்றும் நான்கு மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பான அம்பர் நிற எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.


இன்று (18) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (19) திங்கட்கிழமை அதிகாலை 1 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளில் கடும் மின்னல் தாக்கங்களுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது.


அத்துடன், குருநாகல், யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


குறிப்பாக, இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பாதுகாப்பான கட்டடங்களுக்குள் இருக்குமாறும், மரங்களின் கீழ் தஞ்சமடைவதைத் தவிர்க்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


மேலும், வயல்வெளிகள், தேயிலைத் தோட்டங்கள், நீர்நிலைகள் உள்ளிட்ட திறந்தவெளிப் பகுதிகளில் இருப்பதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அதேவேளை, மின்னல் தாக்கம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் கம்பி இணைப்புள்ள தொலைபேசிகள் மற்றும் மின்சாரத்துடன் இணைக்கப்பட்டுள்ள உபகரணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும், சைக்கிள்கள், உழவு இயந்திரங்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்தவெளி வாகனங்களில் பயணிப்பதைத் தவிர்க்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் மின்கம்பிகள் அறுந்து விழுதல் போன்ற ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


யாழ்., வவுனியா, முல்லைத்தீவு மக்களே அவதானம் நாளை வரை நீடிக்கும் அபாயம் நாட்டின் ஆறு மாகாணங்கள் மற்றும் நான்கு மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பான அம்பர் நிற எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.இன்று (18) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (19) திங்கட்கிழமை அதிகாலை 1 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளில் கடும் மின்னல் தாக்கங்களுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது.அத்துடன், குருநாகல், யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.குறிப்பாக, இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பாதுகாப்பான கட்டடங்களுக்குள் இருக்குமாறும், மரங்களின் கீழ் தஞ்சமடைவதைத் தவிர்க்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.மேலும், வயல்வெளிகள், தேயிலைத் தோட்டங்கள், நீர்நிலைகள் உள்ளிட்ட திறந்தவெளிப் பகுதிகளில் இருப்பதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதேவேளை, மின்னல் தாக்கம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் கம்பி இணைப்புள்ள தொலைபேசிகள் மற்றும் மின்சாரத்துடன் இணைக்கப்பட்டுள்ள உபகரணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும், சைக்கிள்கள், உழவு இயந்திரங்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்தவெளி வாகனங்களில் பயணிப்பதைத் தவிர்க்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் மின்கம்பிகள் அறுந்து விழுதல் போன்ற ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement