காலி – பெந்தொட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்பகுதியில் இன்று (29) மாலை இடம்பெற்ற பாராமோட்டார் (Paramotor) விபத்தில் பாலஸ்தீன பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
கடற்கரை வீதியை அண்மித்த பகுதியில் தனியார் நிறுவனமொன்றினால் பொழுதுபோக்கு நடவடிக்கையாக இயக்கப்பட்ட பாராமோட்டார் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் பாராமோட்டாரில் பயணித்த 31 வயதுடைய பாலஸ்தீன பெண் உயிரிழந்துள்ளதுடன், அதனை இயக்கிய கொலம்பிய நாட்டைச் சேர்ந்த நபர் உயிர் தப்பியுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பெந்தொட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பெந்தொட்டை கடலில் விழுந்த பாராமோட்டார் - வெளிநாட்டு பெண் பலி காலி – பெந்தொட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்பகுதியில் இன்று (29) மாலை இடம்பெற்ற பாராமோட்டார் (Paramotor) விபத்தில் பாலஸ்தீன பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.கடற்கரை வீதியை அண்மித்த பகுதியில் தனியார் நிறுவனமொன்றினால் பொழுதுபோக்கு நடவடிக்கையாக இயக்கப்பட்ட பாராமோட்டார் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்தில் பாராமோட்டாரில் பயணித்த 31 வயதுடைய பாலஸ்தீன பெண் உயிரிழந்துள்ளதுடன், அதனை இயக்கிய கொலம்பிய நாட்டைச் சேர்ந்த நபர் உயிர் தப்பியுள்ளார்.உயிரிழந்த பெண்ணின் சடலம் நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் பெந்தொட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.