இலங்கை ஊடாகப் போலி வர்த்தக ஆவணங்களைப் பயன்படுத்தி, பாகிஸ்தானியப் பொருட்கள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் பாரிய வர்த்தக மோசடி தொடர்பான தகவல்களை இந்தியாவின் வருவாய் புலனாய்வுப் பணிப்பகம் வெளிப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குப் பொருட்களை இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தத் தடையை மீறி இலங்கை வழியாகப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, பாகிஸ்தானைச் சேர்ந்த 73 இலட்சம் கிலோகிராமுக்கும் அதிகமான கனிமப் பொருட்கள் மற்றும் உப்பு, போலி வர்த்தக ஆவணங்களைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்தியாவின் வருவாய் புலனாய்வுப் பணிப்பகத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின்போதே இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதல் ஒன்பது இறக்குமதியாளர்கள் ஊடாக 295 கொள்கலன்களில் குறித்த பொருட்கள் இந்தியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மொத்தப் பெறுமதி 30 கோடி இந்திய ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஐக்கிய அரபு இராச்சியத்தைத் தளமாகக் கொண்ட நிறுவனமொன்றின் ஊடாக, கொழும்புத் துறைமுகத்தைப் பயன்படுத்தி இந்தப் பொருட்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை வழியாக இந்தியாவுக்குக் கடத்தப்பட்ட பாகிஸ்தான் பொருட்கள் அம்பலமான பாரிய மோசடி இலங்கை ஊடாகப் போலி வர்த்தக ஆவணங்களைப் பயன்படுத்தி, பாகிஸ்தானியப் பொருட்கள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் பாரிய வர்த்தக மோசடி தொடர்பான தகவல்களை இந்தியாவின் வருவாய் புலனாய்வுப் பணிப்பகம் வெளிப்படுத்தியுள்ளது.பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குப் பொருட்களை இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தத் தடையை மீறி இலங்கை வழியாகப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதன்படி, பாகிஸ்தானைச் சேர்ந்த 73 இலட்சம் கிலோகிராமுக்கும் அதிகமான கனிமப் பொருட்கள் மற்றும் உப்பு, போலி வர்த்தக ஆவணங்களைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.கடந்த செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்தியாவின் வருவாய் புலனாய்வுப் பணிப்பகத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின்போதே இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கடந்த மார்ச் மாதம் முதல் ஒன்பது இறக்குமதியாளர்கள் ஊடாக 295 கொள்கலன்களில் குறித்த பொருட்கள் இந்தியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மொத்தப் பெறுமதி 30 கோடி இந்திய ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.மேலும், ஐக்கிய அரபு இராச்சியத்தைத் தளமாகக் கொண்ட நிறுவனமொன்றின் ஊடாக, கொழும்புத் துறைமுகத்தைப் பயன்படுத்தி இந்தப் பொருட்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.