• May 27 2026

இலங்கைக்கு கடத்த முயன்ற வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்!

shanu / May 26th 2026, 10:58 am
image

தமிழகம் - மண்டபம் அருகே இலங்கைக்கு கடல் வழியாக கடத்த முயன்ற  3 கோடி மதிப்பிலான 8.46 லட்சம் வலி நிவாரணி மாத்திரை அட்டைகள் அதிரடியாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


மண்டபம் அடுத்த சீனியப்பா தர்கா தெற்கு கடற்கரையில் நேற்று (25)மாலை  3 கோடி மதிப்பிலான 8.46 லட்சம் வலி நிவாரணி மாத்திரை அட்டைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டுவரப்பட்டன. 


இலங்கைக்கு  படகில் பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக இந்திய கடலோர காவல் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஹோவ ர்கிராப்ட் ரோந்து  கப்பலில் கடற்படை அதிகாரிகள் மண்டபம், வேதாளை, சீனியப்பன் தர்ஹா கடற்கரை ஓரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 


இதன்போது  வாகனத்தில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில்  படகில் பெட்டிகள் ஏற்றுவதைக் கண்ட இந்திய கடலோர காவல் படையினர் அவர்களை மடக்கி பிடிக்க முயன்ற போது  படகில்  இருந்த இருவர் படகுடன் கடலில் தப்பித்த நிலையில் சரக்கு வாகனத்தில் இருந்தவர்கள் பெட்டிகளை கடற்கரையில் வீசிவிட்டு  வாகனத்துடன் தப்பி ஓடினர்.


இதையடுத்து கடற்கரை ஓரம் கிடந்த 12 பெட்டிகளை  மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு எடுத்து வந்த கடலோர காவல் படை வீரர்கள் பெட்டியை சோதனை செய்தபோது அதில் சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான 8.46 லட்சம் வலி நிவாரணி  மாத்திரை அட்டைகள் இருந்தது தெரிய வந்தது.


இந்த வகையான வலி நிவாரணி மாத்திரைகள் இலங்கையில் கொக்கின், ஹெரொய்ன், மெத்தப்பட்டமன் போன்ற போதைப் பொருளுடன் கலந்து பயன்படுத்தப்படுவதால் இவ்வகையான வலி நிவாரணி மாத்திரைகள் அதிக அளவில் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகின்றது. 


இதனையடுத்து  வலி நிவாரணி மாத்திரைகள் மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்த இந்திய கடலோர காவல் படையினர் தப்பி ஓடிய மர்ம நபர்கள் மற்றும் சரக்கு வாகனம் குறித்து மண்டபம் மரைன்  பொலிஸாரிடம் தகவல்  அளித்துள்ளனர்.

இலங்கைக்கு கடத்த முயன்ற வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் தமிழகம் - மண்டபம் அருகே இலங்கைக்கு கடல் வழியாக கடத்த முயன்ற  3 கோடி மதிப்பிலான 8.46 லட்சம் வலி நிவாரணி மாத்திரை அட்டைகள் அதிரடியாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.மண்டபம் அடுத்த சீனியப்பா தர்கா தெற்கு கடற்கரையில் நேற்று (25)மாலை  3 கோடி மதிப்பிலான 8.46 லட்சம் வலி நிவாரணி மாத்திரை அட்டைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டுவரப்பட்டன. இலங்கைக்கு  படகில் பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக இந்திய கடலோர காவல் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஹோவ ர்கிராப்ட் ரோந்து  கப்பலில் கடற்படை அதிகாரிகள் மண்டபம், வேதாளை, சீனியப்பன் தர்ஹா கடற்கரை ஓரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதன்போது  வாகனத்தில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில்  படகில் பெட்டிகள் ஏற்றுவதைக் கண்ட இந்திய கடலோர காவல் படையினர் அவர்களை மடக்கி பிடிக்க முயன்ற போது  படகில்  இருந்த இருவர் படகுடன் கடலில் தப்பித்த நிலையில் சரக்கு வாகனத்தில் இருந்தவர்கள் பெட்டிகளை கடற்கரையில் வீசிவிட்டு  வாகனத்துடன் தப்பி ஓடினர்.இதையடுத்து கடற்கரை ஓரம் கிடந்த 12 பெட்டிகளை  மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு எடுத்து வந்த கடலோர காவல் படை வீரர்கள் பெட்டியை சோதனை செய்தபோது அதில் சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான 8.46 லட்சம் வலி நிவாரணி  மாத்திரை அட்டைகள் இருந்தது தெரிய வந்தது.இந்த வகையான வலி நிவாரணி மாத்திரைகள் இலங்கையில் கொக்கின், ஹெரொய்ன், மெத்தப்பட்டமன் போன்ற போதைப் பொருளுடன் கலந்து பயன்படுத்தப்படுவதால் இவ்வகையான வலி நிவாரணி மாத்திரைகள் அதிக அளவில் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகின்றது. இதனையடுத்து  வலி நிவாரணி மாத்திரைகள் மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்த இந்திய கடலோர காவல் படையினர் தப்பி ஓடிய மர்ம நபர்கள் மற்றும் சரக்கு வாகனம் குறித்து மண்டபம் மரைன்  பொலிஸாரிடம் தகவல்  அளித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement