இலங்கையில் டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 65,034 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொசு பெருகும் இடங்களை அழித்தல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் தொடர்ந்து பின்பற்றுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் 71 மாணவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் துணைவேந்தர் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
அவர்களில் 5 பேர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்றுவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெங்கு உயிரிழப்பு 45 ஆக அதிகரிப்பு - 65,034 நோயாளர்கள் பதிவு இலங்கையில் டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.அத்துடன், நாடு முழுவதும் இதுவரை மொத்தம் 65,034 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.டெங்கு பரவல் அதிகரித்து வரும் நிலையில், கொசு பெருகும் இடங்களை அழித்தல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் தொடர்ந்து பின்பற்றுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.இந்நிலையில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் 71 மாணவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் துணைவேந்தர் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க தெரிவித்துள்ளார். அவர்களில் 5 பேர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்றுவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.