• Jul 11 2026

சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு துரித நீதி வேண்டும்!- 40 ஆயிரம் கையெழுத்துகள் அடங்கிய மனு கையளிப்பு

Chithra / Jul 9th 2026, 4:00 pm
image


தீர்க்கப்படாத சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகளுக்குத் துரித நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, துஷ் விக்கிரமநாயக்க தலைமையிலான குழுவினர் திரட்டிய 40 ஆயிரம் கையெழுத்துகள் அடங்கிய மனு இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் கையளிக்கப்பட்டது.


நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மனுவைப் பெற்றுக்கொண்டனர்.


இந்த மனுவில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹிணி கவிரத்ன, சமிந்தரானி கிரியெல்ல உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல நாடா ளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் கையெழுத்திட்டனர்.


இதற்கு முன்னதாக, துஷ் விக்கிரமநாயக்க தலைமையிலான குழுவினர், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சஜித் பிரேமதாஸவைச் சந்தித்து, இந்த விடயத்தின் முக்கியத்துவம் மற்றும் நிலுவையில் உள்ள முறைப்பாடுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு துரித நீதி வேண்டும்- 40 ஆயிரம் கையெழுத்துகள் அடங்கிய மனு கையளிப்பு தீர்க்கப்படாத சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகளுக்குத் துரித நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, துஷ் விக்கிரமநாயக்க தலைமையிலான குழுவினர் திரட்டிய 40 ஆயிரம் கையெழுத்துகள் அடங்கிய மனு இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் கையளிக்கப்பட்டது.நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மனுவைப் பெற்றுக்கொண்டனர்.இந்த மனுவில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹிணி கவிரத்ன, சமிந்தரானி கிரியெல்ல உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல நாடா ளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் கையெழுத்திட்டனர்.இதற்கு முன்னதாக, துஷ் விக்கிரமநாயக்க தலைமையிலான குழுவினர், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சஜித் பிரேமதாஸவைச் சந்தித்து, இந்த விடயத்தின் முக்கியத்துவம் மற்றும் நிலுவையில் உள்ள முறைப்பாடுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement