• May 16 2026

தடம்புரண்ட முச்சக்கர வண்டி; 4 வயதுச் சிறுவன் மரணம்! பெற்றோர் வைத்தியசாலையில்

Chithra / May 15th 2026, 2:39 pm
image

மாத்தறை, வெலிகமை பிரதேசத்தில் முச்சக்கர வண்டி வீதியில் தடம்புரண்டு இடம்பெற்ற விபத்தில் 4 வயதுச் சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.


மேற்படி சிறுவன் நேற்று இரவு தனது பெற்றோருடன் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போதே, அந்த முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டை இழந்து வீதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.


விபத்தில் பலத்த காயமடைந்த 4 வயதுச் சிறுவன் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்த சிறுவனின் பெற்றோரும், முச்சக்கர வண்டி சாரதியும் காயமடைந்துள்ளனர்.


அவர்கள் மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

தடம்புரண்ட முச்சக்கர வண்டி; 4 வயதுச் சிறுவன் மரணம் பெற்றோர் வைத்தியசாலையில் மாத்தறை, வெலிகமை பிரதேசத்தில் முச்சக்கர வண்டி வீதியில் தடம்புரண்டு இடம்பெற்ற விபத்தில் 4 வயதுச் சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.மேற்படி சிறுவன் நேற்று இரவு தனது பெற்றோருடன் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போதே, அந்த முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டை இழந்து வீதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.விபத்தில் பலத்த காயமடைந்த 4 வயதுச் சிறுவன் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த சிறுவனின் பெற்றோரும், முச்சக்கர வண்டி சாரதியும் காயமடைந்துள்ளனர்.அவர்கள் மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement