• Jun 12 2026

தொல்லியல் ஆய்வுக்கு எதிர்ப்பு: அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டதால் காரைநகரில் பரபரப்பு

Chithra / Jun 10th 2026, 7:58 pm
image

காரைநகர் வேரப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள காரைநகர் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்குச் சொந்தமான காணியில் தொல்லியல் ஆய்வுகளை முன்னெடுக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தொல்லியல் திணைக்கள அதிகாரிகளும் வெளிநாட்டு நிபுணர்களும் இணைந்து குறித்த பகுதியில் தொல்லியல் அகழ்வாராய்ச்சி மற்றும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள முற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


எனினும், இந்நடவடிக்கைக்கு காரைநகர் பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தொல்லியல் ஆய்வுகள் என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் தங்களது எதிர்ப்பை மக்கள் வெளிப்படுத்தியதுடன், உடனடியாக பணிகளை நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதையடுத்து, அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் உள்ளூராட்சி பிரதிநிதிகளின் தலையீட்டின் காரணமாக தொல்லியல் திணைக்கள அதிகாரிகளும் வெளிநாட்டு நிபுணர்களும் தங்களது ஆய்வு முயற்சிகளை கைவிட்டு அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த சம்பவம் தொடர்பில் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவிய நிலையில், எதிர்காலத்தில் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமாயின் மக்களின் கருத்துக்களையும் உள்ளூராட்சி அமைப்புகளின் நிலைப்பாட்டையும் கருத்தில் கொள்ள வேண்டும் என உள்ளூர் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தொல்லியல் ஆய்வுக்கு எதிர்ப்பு: அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டதால் காரைநகரில் பரபரப்பு காரைநகர் வேரப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள காரைநகர் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்குச் சொந்தமான காணியில் தொல்லியல் ஆய்வுகளை முன்னெடுக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தொல்லியல் திணைக்கள அதிகாரிகளும் வெளிநாட்டு நிபுணர்களும் இணைந்து குறித்த பகுதியில் தொல்லியல் அகழ்வாராய்ச்சி மற்றும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள முற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.எனினும், இந்நடவடிக்கைக்கு காரைநகர் பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தொல்லியல் ஆய்வுகள் என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் தங்களது எதிர்ப்பை மக்கள் வெளிப்படுத்தியதுடன், உடனடியாக பணிகளை நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதையடுத்து, அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் உள்ளூராட்சி பிரதிநிதிகளின் தலையீட்டின் காரணமாக தொல்லியல் திணைக்கள அதிகாரிகளும் வெளிநாட்டு நிபுணர்களும் தங்களது ஆய்வு முயற்சிகளை கைவிட்டு அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவம் தொடர்பில் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவிய நிலையில், எதிர்காலத்தில் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமாயின் மக்களின் கருத்துக்களையும் உள்ளூராட்சி அமைப்புகளின் நிலைப்பாட்டையும் கருத்தில் கொள்ள வேண்டும் என உள்ளூர் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement