• Aug 28 2026

நேபாள பேரவலம்; சுரங்கத்துக்குள் சிக்கிய 100 தொழிலாளர்களை மீட்க தீவிர முயற்சி!

Chithra / Aug 28th 2026, 4:05 pm
image


இரண்டு நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கினால், நீரில் மூழ்கிய நேபாளத்தின் திரிசூலி 3A நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள சுமார் 100 பேரை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

சுரங்கப்பாதைக்குள் சிக்கியிருந்த 350 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 100க்கும் மேற்பட்டோரை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக கடுமையான சீரற்ற வானிலைக்கு மத்தியிலும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நேபாள இராணுவம் தெரிவித்துள்ளது.


இந்தச் இயற்கைச் சீற்றத்தினால் 1,400-க்கும் மேற்பட்டோர் இதுவரை காணாமல் போயுள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.


காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளைத் துரிதப்படுத்துவதற்காக நேபாள இராணுவத்தினரும் மீட்புக் குழுவினரும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.


இமயமலைப் பகுதியில் பனிப்பாறை திடீரென உடைந்து விழுந்ததன் காரணமாகவே இந்த அதிதீவிர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


இதன் காரணமாக உருவான பெருவெள்ளமும் சேறும், எல்லைப் பகுதியில் உள்ள பல கிராமங்களையும் பாலங்களையும் முற்றிலுமாக அடித்துச் சென்றுள்ளன.


திபெத் எல்லைப் பகுதியிலும் இதன் தாக்கம் எதிரொலித்துள்ள நிலையில், சீனத் தரப்பில் 3 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதன் மூலம் நேபாளம் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளிலும் சேர்த்து ஒட்டுமொத்த உயிரிழப்பு 472 ஆக உயர்ந்திருக்கிறது.


திபெத்தின் சோசென் கோலா மற்றும் புரேபு சாங்போ ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் புதிதாகத் தற்காலிகத் தடுப்பு ஏரி ஒன்று உருவாகியுள்ளது.


இதில் சுமார் 30 இலட்சம் கன மீட்டர் நீர் தேங்கும் அபாயம் உள்ளதால், சீனா கீழ்நிலைப் பகுதிகளுக்கு  எச்சரிக்கை விடுத்துள்ளது.


பாதிக்கப்பட்ட பகுதிகளில் காணாமல் போன நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் மற்றும் யாத்ரீகர்களைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


இதற்காக நேபாள இராணுவத்தின் ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


வெள்ளப்பெருக்கினால் வீதிகள், பாலங்கள் மற்றும் மின்சாரத் திட்டங்கள் உள்ளிட்ட பல உட்கட்டமைப்புகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதால், மீட்பு நடவடிக்கைகளுக்கும் கடும் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன.

 

இந்நிலையில், வெள்ளப்பெருக்கில் சிக்கியிருந்த இரட்டைக் குழந்தைகளை நேபாள இராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாள பேரவலம்; சுரங்கத்துக்குள் சிக்கிய 100 தொழிலாளர்களை மீட்க தீவிர முயற்சி இரண்டு நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கினால், நீரில் மூழ்கிய நேபாளத்தின் திரிசூலி 3A நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள சுமார் 100 பேரை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுரங்கப்பாதைக்குள் சிக்கியிருந்த 350 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 100க்கும் மேற்பட்டோரை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக கடுமையான சீரற்ற வானிலைக்கு மத்தியிலும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நேபாள இராணுவம் தெரிவித்துள்ளது.இந்தச் இயற்கைச் சீற்றத்தினால் 1,400-க்கும் மேற்பட்டோர் இதுவரை காணாமல் போயுள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளைத் துரிதப்படுத்துவதற்காக நேபாள இராணுவத்தினரும் மீட்புக் குழுவினரும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.இமயமலைப் பகுதியில் பனிப்பாறை திடீரென உடைந்து விழுந்ததன் காரணமாகவே இந்த அதிதீவிர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக உருவான பெருவெள்ளமும் சேறும், எல்லைப் பகுதியில் உள்ள பல கிராமங்களையும் பாலங்களையும் முற்றிலுமாக அடித்துச் சென்றுள்ளன.திபெத் எல்லைப் பகுதியிலும் இதன் தாக்கம் எதிரொலித்துள்ள நிலையில், சீனத் தரப்பில் 3 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதன் மூலம் நேபாளம் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளிலும் சேர்த்து ஒட்டுமொத்த உயிரிழப்பு 472 ஆக உயர்ந்திருக்கிறது.திபெத்தின் சோசென் கோலா மற்றும் புரேபு சாங்போ ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் புதிதாகத் தற்காலிகத் தடுப்பு ஏரி ஒன்று உருவாகியுள்ளது.இதில் சுமார் 30 இலட்சம் கன மீட்டர் நீர் தேங்கும் அபாயம் உள்ளதால், சீனா கீழ்நிலைப் பகுதிகளுக்கு  எச்சரிக்கை விடுத்துள்ளது.பாதிக்கப்பட்ட பகுதிகளில் காணாமல் போன நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் மற்றும் யாத்ரீகர்களைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இதற்காக நேபாள இராணுவத்தின் ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.வெள்ளப்பெருக்கினால் வீதிகள், பாலங்கள் மற்றும் மின்சாரத் திட்டங்கள் உள்ளிட்ட பல உட்கட்டமைப்புகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதால், மீட்பு நடவடிக்கைகளுக்கும் கடும் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், வெள்ளப்பெருக்கில் சிக்கியிருந்த இரட்டைக் குழந்தைகளை நேபாள இராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement