• Apr 18 2026

ஜனாதிபதி உட்பட தேசிய மக்கள் சக்தியினர் சிறைக்கு செல்ல நேரிடும்! - உதய கம்மன்பில எச்சரிக்கை

Chithra / Sep 23rd 2025, 8:42 am
image


சொத்துவிபரங்களை மறைத்த குற்றச்சாட்டில் எதிர்காலத்தில் ஜனாதிபதி உட்பட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் சிறைக்கு செல்ல வேண்டி ஏற்படும் என பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 2024 ஜீன் மாதம் பிரித்தானியாவுக்கு சென்றிருந்தார். இந்த பயணத்துக்கான செலவு விபரங்கள் ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களில் குறிப்பிடப்படவில்லை.

அதேபோல் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் என்ற அடிப்படையில் இந்தியா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்திருந்தார்.இந்த பயணங்களுக்கான செலவு விபரங்கள் ஏதும் வெளிப்படுத்தப்படவில்லை.

ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் 8(2) பிரிவில் தமக்கு பரிசாகவோ அல்லது வேறு வழிமுறைகளிலோ ஏதேனும் சலுகைகள் கிடைக்கப்பெறுமாயின் அதன் விபரங்களையும் சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபர திரட்டில் உள்ளடக்க வேண்டும்.

ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனக்கு பரிசாகவோ அல்லது வேறு வழியில் கிடைக்கப்பெற்ற சலுகைகளையோ வெளிப்படுத்தவில்லை.

சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களில் போலியான விடயங்களை உள்ளடக்கல்,உண்மையை மறைத்தல் ஆகிய குற்றங்களுக்காக ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் அமைச்சர்கள்,பிரதி அமைச்சர்கள் எதிர்காலத்தில் சிறைக்கு செல்ல நேரிடும்  என  தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி உட்பட தேசிய மக்கள் சக்தியினர் சிறைக்கு செல்ல நேரிடும் - உதய கம்மன்பில எச்சரிக்கை சொத்துவிபரங்களை மறைத்த குற்றச்சாட்டில் எதிர்காலத்தில் ஜனாதிபதி உட்பட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் சிறைக்கு செல்ல வேண்டி ஏற்படும் என பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 2024 ஜீன் மாதம் பிரித்தானியாவுக்கு சென்றிருந்தார். இந்த பயணத்துக்கான செலவு விபரங்கள் ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களில் குறிப்பிடப்படவில்லை.அதேபோல் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் என்ற அடிப்படையில் இந்தியா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்திருந்தார்.இந்த பயணங்களுக்கான செலவு விபரங்கள் ஏதும் வெளிப்படுத்தப்படவில்லை.ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் 8(2) பிரிவில் தமக்கு பரிசாகவோ அல்லது வேறு வழிமுறைகளிலோ ஏதேனும் சலுகைகள் கிடைக்கப்பெறுமாயின் அதன் விபரங்களையும் சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபர திரட்டில் உள்ளடக்க வேண்டும்.ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனக்கு பரிசாகவோ அல்லது வேறு வழியில் கிடைக்கப்பெற்ற சலுகைகளையோ வெளிப்படுத்தவில்லை.சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களில் போலியான விடயங்களை உள்ளடக்கல்,உண்மையை மறைத்தல் ஆகிய குற்றங்களுக்காக ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் அமைச்சர்கள்,பிரதி அமைச்சர்கள் எதிர்காலத்தில் சிறைக்கு செல்ல நேரிடும்  என  தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement