• Apr 21 2026

மியன்மாரில் நடந்த பேரனர்த்தம்: செல்வந்த நாடுகளிடம் சஜித் விடுத்த கோரிக்கை

Chithra / Mar 30th 2025, 9:44 am
image

  

மியன்மாரில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் ஏராளமான உயிர்கள் பலியாகியுள்ளன. ஏராளமான சொத்துக்களும் அழிந்துள்ளன. இந்த அவல நிலையை எதிர்கொண்ட மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு  அவர் மேலும் கூறுகையில்,

இந்த அனர்த்தத்தில் காணாமல்போன மக்கள் மற்றும் விலங்குகளின் உயிர்களைப் பாதுகாக்க உரிய தரப்புகளுக்கு இயலுமை கிட்டட்டும் எனப்  பிரார்த்திக்கின்றேன்.

இம்மக்களுக்கு இயன்ற அதிகபட்ச உதவிகளையும்,  நிவாரணங்களையும், அவசர மனிதாபிமான மீட்பு நடவடிக்கைகளையும் பெற்றுக் கொடுக்குமாறு உலகின் செல்வந்த நாடுகளிடம் கௌரவத்துடன் கேட்டுக்கொள்கின்றேன். - என்றார்.

மியன்மாரில் நடந்த பேரனர்த்தம்: செல்வந்த நாடுகளிடம் சஜித் விடுத்த கோரிக்கை   மியன்மாரில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் ஏராளமான உயிர்கள் பலியாகியுள்ளன. ஏராளமான சொத்துக்களும் அழிந்துள்ளன. இந்த அவல நிலையை எதிர்கொண்ட மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.ஊடகங்களுக்கு  அவர் மேலும் கூறுகையில்,இந்த அனர்த்தத்தில் காணாமல்போன மக்கள் மற்றும் விலங்குகளின் உயிர்களைப் பாதுகாக்க உரிய தரப்புகளுக்கு இயலுமை கிட்டட்டும் எனப்  பிரார்த்திக்கின்றேன்.இம்மக்களுக்கு இயன்ற அதிகபட்ச உதவிகளையும்,  நிவாரணங்களையும், அவசர மனிதாபிமான மீட்பு நடவடிக்கைகளையும் பெற்றுக் கொடுக்குமாறு உலகின் செல்வந்த நாடுகளிடம் கௌரவத்துடன் கேட்டுக்கொள்கின்றேன். - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement