• Apr 30 2026

முத்து ஐயன்கட்டு இடதுகரை அ.த.க பாடசாலை மாணவர்களின் மரதன்!

shanu / Mar 13th 2026, 5:34 pm
image


புதுக்குடியிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட முத்து ஐயன்கட்டு இடதுகரை அ.த.க பாடசாலை மாணவர்களின் 2026 ஆம் ஆண்டு இல்ல மெய்வன்மை திறனாய்வு போட்டியினை முன்னிட்டு மாணவர்களுக்கிடையிலான மரதனோட்டப் போட்டி இன்றையதினம் (13.03.2026) காலை பாடசாலையின் முதல்வர் பாஸ்கரன் இரட்ணசிங்கம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. 


ஆண்களுக்கான மரதனோட்ட போட்டி முத்து ஐயன்கட்டு இடதுகரை அ.த.க பாடசாலையில் ஆரம்பித்து பாடசாலை வாயில் வரையும், பெண்களுக்கான மரதனோட்ட போட்டி முத்தையன்கட்டு குளத்தடியிலிருந்து முத்து ஐயன்கட்டு இடதுகரை அ.த.க பாடசாலை வரையும் இடம்பெற்ற மரதனோட்ட போட்டியில் பாடசாலையின் மாணவ, மாணவிகள் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர். 


ஆண்கள் பிரிவிலும், பெண்கள் பிரிவிலும் வெற்றி பெற்ற முதல் மூன்று இடங்களை பெற்ற வீரர்களுக்கு வெற்றி கேடயங்களும், பதக்கமும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளதுடன் முதல் 10 இடங்களை பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களும், மரதனோட்டத்தினை நிறைவு செய்த அனைத்து மாணவ மாணவிகளுக்கான சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர் 


தேசிய மரதனோட்ட வீரரான கனடாவில் வசிக்கும் கந்தசாமி பத்மநாதனின் நிதி அனுசரணையில் இடம்பெற்ற குறித்த மரதனோட்ட நிகழ்வில் மரதனோட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் குமுதன், பாடசாலையின் முதல்வர் பாஸ்கரன் இரட்ணசிங்கம் , பாடசாலையின் உப அதிபர், ஆசிரியர்கள் , பெற்றோர்கள் , மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் , விளையாட்டு கழகத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

முத்து ஐயன்கட்டு இடதுகரை அ.த.க பாடசாலை மாணவர்களின் மரதன் புதுக்குடியிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட முத்து ஐயன்கட்டு இடதுகரை அ.த.க பாடசாலை மாணவர்களின் 2026 ஆம் ஆண்டு இல்ல மெய்வன்மை திறனாய்வு போட்டியினை முன்னிட்டு மாணவர்களுக்கிடையிலான மரதனோட்டப் போட்டி இன்றையதினம் (13.03.2026) காலை பாடசாலையின் முதல்வர் பாஸ்கரன் இரட்ணசிங்கம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. ஆண்களுக்கான மரதனோட்ட போட்டி முத்து ஐயன்கட்டு இடதுகரை அ.த.க பாடசாலையில் ஆரம்பித்து பாடசாலை வாயில் வரையும், பெண்களுக்கான மரதனோட்ட போட்டி முத்தையன்கட்டு குளத்தடியிலிருந்து முத்து ஐயன்கட்டு இடதுகரை அ.த.க பாடசாலை வரையும் இடம்பெற்ற மரதனோட்ட போட்டியில் பாடசாலையின் மாணவ, மாணவிகள் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர். ஆண்கள் பிரிவிலும், பெண்கள் பிரிவிலும் வெற்றி பெற்ற முதல் மூன்று இடங்களை பெற்ற வீரர்களுக்கு வெற்றி கேடயங்களும், பதக்கமும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளதுடன் முதல் 10 இடங்களை பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களும், மரதனோட்டத்தினை நிறைவு செய்த அனைத்து மாணவ மாணவிகளுக்கான சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர் தேசிய மரதனோட்ட வீரரான கனடாவில் வசிக்கும் கந்தசாமி பத்மநாதனின் நிதி அனுசரணையில் இடம்பெற்ற குறித்த மரதனோட்ட நிகழ்வில் மரதனோட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் குமுதன், பாடசாலையின் முதல்வர் பாஸ்கரன் இரட்ணசிங்கம் , பாடசாலையின் உப அதிபர், ஆசிரியர்கள் , பெற்றோர்கள் , மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் , விளையாட்டு கழகத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement