• Sep 08 2026

வடமாகாண மல்யுத்தப் போட்டியில் ஆண்கள், பெண்கள் இரு பிரிவிலும் முல்லைத்தீவு அணிகள் முதலிடம் பெற்று சாதனை

Aathira / Sep 7th 2026, 7:48 pm
image

தேசிய விளையாட்டு பெருவிழா – 2026 வடமாகாண மட்ட மல்யுத்தப் (Wrestling) போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் முல்லைத்தீவு மாவட்ட அணிகள் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளன.

மாகாண கல்வி, பண்பாட்டு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டி இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்றது.

வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற திறந்த (Open) மல்யுத்தப் போட்டியில், ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பிரிவுகளிலும் முல்லைத்தீவு மாவட்ட அணிகள் முதலிடத்தை தமதாக்கிக் கொண்டன.

ஆண்கள் பிரிவில் முல்லைத்தீவு அணி 5 தங்கப்பதக்கங்கள், 4 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 1 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 10 பதக்கங்களைப் பெற்றுக்கொண்டது.

பெண்கள் பிரிவில் முல்லைத்தீவு அணி 7 தங்கப்பதக்கங்கள், 8 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 3 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 18 பதக்கங்களைப் பெற்றுக்கொண்டது.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் அணி தொடர்ச்சியாக 8 ஆண்டுகளாக வடமாகாண மட்ட மல்யுத்தப் போட்டியில் முதலிடத்தை பெற்று வருவதுடன், பெண்கள் அணி மாகாண மட்டப் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டு 5 ஆண்டுகளாக தொடர்ச்சியாக முதலிடத்தை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் வடமாகாண மல்யுத்தத் துறையில் முல்லைத்தீவு மாவட்டம் தொடர்ச்சியாக தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருவது குறிப்பிடத்தக்கது

வடமாகாண மல்யுத்தப் போட்டியில் ஆண்கள், பெண்கள் இரு பிரிவிலும் முல்லைத்தீவு அணிகள் முதலிடம் பெற்று சாதனை தேசிய விளையாட்டு பெருவிழா – 2026 வடமாகாண மட்ட மல்யுத்தப் (Wrestling) போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் முல்லைத்தீவு மாவட்ட அணிகள் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளன.மாகாண கல்வி, பண்பாட்டு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டி இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்றது.வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற திறந்த (Open) மல்யுத்தப் போட்டியில், ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பிரிவுகளிலும் முல்லைத்தீவு மாவட்ட அணிகள் முதலிடத்தை தமதாக்கிக் கொண்டன.ஆண்கள் பிரிவில் முல்லைத்தீவு அணி 5 தங்கப்பதக்கங்கள், 4 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 1 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 10 பதக்கங்களைப் பெற்றுக்கொண்டது.பெண்கள் பிரிவில் முல்லைத்தீவு அணி 7 தங்கப்பதக்கங்கள், 8 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 3 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 18 பதக்கங்களைப் பெற்றுக்கொண்டது.இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் அணி தொடர்ச்சியாக 8 ஆண்டுகளாக வடமாகாண மட்ட மல்யுத்தப் போட்டியில் முதலிடத்தை பெற்று வருவதுடன், பெண்கள் அணி மாகாண மட்டப் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டு 5 ஆண்டுகளாக தொடர்ச்சியாக முதலிடத்தை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.இதன் மூலம் வடமாகாண மல்யுத்தத் துறையில் முல்லைத்தீவு மாவட்டம் தொடர்ச்சியாக தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருவது குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement