ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தளம் — திருகோணமலை பிரதான வீதியில் 134 மைல்கல் அருகில் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, கிளை வீதியிலிருந்து பிரதான வீதிக்கு நுழைந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது காயமடைந்த நான்கு பேர் ஹொரவ்பொத்தானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் கப்புகொல்லாவ பகுதியைச் சேர்ந்த 64 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை ஹொரவ்பொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திருகோணமலை வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து — ஒருவர் பலி ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தளம் — திருகோணமலை பிரதான வீதியில் 134 மைல்கல் அருகில் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.திருகோணமலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, கிளை வீதியிலிருந்து பிரதான வீதிக்கு நுழைந்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இதன்போது காயமடைந்த நான்கு பேர் ஹொரவ்பொத்தானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.உயிரிழந்தவர் கப்புகொல்லாவ பகுதியைச் சேர்ந்த 64 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை ஹொரவ்பொத்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.