• Apr 17 2026

மத்திய கிழக்கு போர் சூழல் இலங்கை மக்களை பாதிக்கலாம் - எதிர்கொள்ள தயாராகும் அரசு

Chithra / Mar 23rd 2026, 12:14 pm
image

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் நீண்டகாலம் தொடருமானால், அதன் நேரடி மற்றும் மறைமுகத் தாக்கங்கள் நமது நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்க வாய்ப்புள்ளது  என அமைச்சர் உபாலி பன்னில தெரிவித்தார்.  


கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உப்பாலி பன்னில நேற்று  பிற்பகல் களனி தொகுதியில் பல அபிவிருத்தித் திட்டங்களை மக்கள் பாவனைக்குக் கையளித்தார்.


இதன்போது, களனி ஈரியவெட்டிய மற்றும் வதனிமுல்ல வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தைத் திறந்து வைத்ததுடன், வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் குறைந்த வருமானமுடையோருக்கான திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட புதிய வீடு ஒன்றையும் பயனாளரிடம் கையளித்தார்.


அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,


மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் நீண்டகாலம் தொடருமானால், அதன் நேரடி மற்றும் மறைமுகத் தாக்கங்கள் நமது நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்க வாய்ப்புள்ளது. 


இதனை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. எனினும், இச்சூழ்நிலையைக் கையாள்வதற்கு அரசாங்கம் முறையான திட்டங்களுடன் அவதானமாகச் செயற்பட்டு வருகின்றது.


இந்த நிலைமையைப் புரிந்து கொண்டு அனைவரும் பொறுமையுடன் செயற்பட வேண்டும். எவ்விதத்திலும் பொதுமக்கள் தேவையற்ற அச்சமோ அல்லது கவலையோ அடையத் தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்தார். 


மத்திய கிழக்கு போர் சூழல் இலங்கை மக்களை பாதிக்கலாம் - எதிர்கொள்ள தயாராகும் அரசு மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் நீண்டகாலம் தொடருமானால், அதன் நேரடி மற்றும் மறைமுகத் தாக்கங்கள் நமது நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்க வாய்ப்புள்ளது  என அமைச்சர் உபாலி பன்னில தெரிவித்தார்.  கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உப்பாலி பன்னில நேற்று  பிற்பகல் களனி தொகுதியில் பல அபிவிருத்தித் திட்டங்களை மக்கள் பாவனைக்குக் கையளித்தார்.இதன்போது, களனி ஈரியவெட்டிய மற்றும் வதனிமுல்ல வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தைத் திறந்து வைத்ததுடன், வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் குறைந்த வருமானமுடையோருக்கான திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட புதிய வீடு ஒன்றையும் பயனாளரிடம் கையளித்தார்.அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் நீண்டகாலம் தொடருமானால், அதன் நேரடி மற்றும் மறைமுகத் தாக்கங்கள் நமது நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்க வாய்ப்புள்ளது. இதனை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. எனினும், இச்சூழ்நிலையைக் கையாள்வதற்கு அரசாங்கம் முறையான திட்டங்களுடன் அவதானமாகச் செயற்பட்டு வருகின்றது.இந்த நிலைமையைப் புரிந்து கொண்டு அனைவரும் பொறுமையுடன் செயற்பட வேண்டும். எவ்விதத்திலும் பொதுமக்கள் தேவையற்ற அச்சமோ அல்லது கவலையோ அடையத் தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement