ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இன்று (23) அதிகாலையில் பாரிய வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேவேளை ஈரானிய தலைநகரின் ஐந்து பகுதிகளில் வான்வழித் தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சேதம் தொடர்பிலான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என ஈரான் பதிவிட்டுள்ளது.
இதற்கிடையே இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட அறிக்கையில், “தெஹ்ரானில் உள்ள ஈரானிய பயங்கரவாத ஆட்சியின் உட்கட்டமைப்புகளைக் குறிவைத்து பரந்த அளவிலான தாக்குதல்களை நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளது.
ஈரானின் தலைநகரில் வெடிப்புச் சத்தங்கள் நிகழ்ந்ததாக வந்த செய்திகளைத் தொடர்ந்து இவ் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்கு போர் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில் பாரிய இழப்புக்களும் தாக்கங்களும் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தெஹ்ரானில் இன்று பாரிய வெடிப்புச் சத்தங்கள்; தாக்குதல்களை தொடங்கிய இஸ்ரேல் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இன்று (23) அதிகாலையில் பாரிய வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அதேவேளை ஈரானிய தலைநகரின் ஐந்து பகுதிகளில் வான்வழித் தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.சேதம் தொடர்பிலான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என ஈரான் பதிவிட்டுள்ளது.இதற்கிடையே இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட அறிக்கையில், “தெஹ்ரானில் உள்ள ஈரானிய பயங்கரவாத ஆட்சியின் உட்கட்டமைப்புகளைக் குறிவைத்து பரந்த அளவிலான தாக்குதல்களை நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளது.ஈரானின் தலைநகரில் வெடிப்புச் சத்தங்கள் நிகழ்ந்ததாக வந்த செய்திகளைத் தொடர்ந்து இவ் அறிவிப்பு வெளியாகியுள்ளது.மத்திய கிழக்கு போர் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில் பாரிய இழப்புக்களும் தாக்கங்களும் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.