• Apr 22 2026

பெண்களை வர்ணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்; கட்சியில் இருந்து நீக்குங்கள்! கொதித்தெழுந்த சாமர சம்பத்

Chithra / Nov 25th 2025, 1:38 pm
image

 

பெண்களை வர்ணிக்கும் உறுப்பினர்களை உடனடியாக கட்சியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். 

அத்துடன், தங்களது கட்சியில் அவ்வாறு யாரேனும் நடந்துக்கொண்டால், அவர்களை உடனே பதவியில் இருந்து நீக்கப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

பெண்களை அழகானவர்கள் உள்ளிட்ட சொற்களைக் கொண்டு வர்ணிக்கும் அமைச்சர்களை வைத்துக் கொண்டு எவ்வாறு கல்வியை முறையாக முன்னெடுக்க முடியும்.

ஆகவே, இது குறித்து, ஜனாதிபதியும் கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். 

 

அத்துடன், தற்போது மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதை விடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

நாடாளுமன்றத்தை மக்கள் பார்த்துக் கொண்டிருப்பதால், ஆங்கிலத்தில் பேச முடியாதவர்கள் ஒதுங்கி இருப்பது நல்லது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

இல்லையேல், ஆங்கிலத்தை கற்றுக்கொண்டு வந்து உரையாற்றுமாறும்  சாமர சம்பத் தசநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை  க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சில வினாத்தாள்கள் கசிந்துள்ளதா என்பதை உறுதி செய்ய விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்  தெரிவித்துள்ளார்.

நுகேகொடையில் உள்ள தனியார் கல்வி நிலையமொன்றில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மாதிரி வினாத்தாளில் உள்ள 27 கேள்விகளும் உயர்தர பொருளாதார வினாத்தாளில் உள்ள 27 கேள்விகளும் ஒரே மாதிரியாக இருப்பதாக இன்று  நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது குறித்து விசாரணை நடத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர்  தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள மாணவர்கள் போல கிராமப்புறங்களிலுள்ள மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற முடியாமைக்கு, இதுபோன்ற வினாத்தாள் கசிவே காரணம் என அவர்  தெரிவித்தார்.

பெண்களை வர்ணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்; கட்சியில் இருந்து நீக்குங்கள் கொதித்தெழுந்த சாமர சம்பத்  பெண்களை வர்ணிக்கும் உறுப்பினர்களை உடனடியாக கட்சியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், தங்களது கட்சியில் அவ்வாறு யாரேனும் நடந்துக்கொண்டால், அவர்களை உடனே பதவியில் இருந்து நீக்கப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெண்களை அழகானவர்கள் உள்ளிட்ட சொற்களைக் கொண்டு வர்ணிக்கும் அமைச்சர்களை வைத்துக் கொண்டு எவ்வாறு கல்வியை முறையாக முன்னெடுக்க முடியும்.ஆகவே, இது குறித்து, ஜனாதிபதியும் கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.  அத்துடன், தற்போது மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதை விடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தை மக்கள் பார்த்துக் கொண்டிருப்பதால், ஆங்கிலத்தில் பேச முடியாதவர்கள் ஒதுங்கி இருப்பது நல்லது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இல்லையேல், ஆங்கிலத்தை கற்றுக்கொண்டு வந்து உரையாற்றுமாறும்  சாமர சம்பத் தசநாயக்க வலியுறுத்தியுள்ளார்.இதேவேளை  க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சில வினாத்தாள்கள் கசிந்துள்ளதா என்பதை உறுதி செய்ய விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்  தெரிவித்துள்ளார்.நுகேகொடையில் உள்ள தனியார் கல்வி நிலையமொன்றில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மாதிரி வினாத்தாளில் உள்ள 27 கேள்விகளும் உயர்தர பொருளாதார வினாத்தாளில் உள்ள 27 கேள்விகளும் ஒரே மாதிரியாக இருப்பதாக இன்று  நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.இது குறித்து விசாரணை நடத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர்  தெரிவித்தார்.கொழும்பில் உள்ள மாணவர்கள் போல கிராமப்புறங்களிலுள்ள மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற முடியாமைக்கு, இதுபோன்ற வினாத்தாள் கசிவே காரணம் என அவர்  தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement