• May 06 2026

பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு!

Ziya / May 6th 2026, 10:09 am
image

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் (Andrew Patrick) மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் அதிகாரி இசபெல்லா மார்ட்டின் (Isabella Martin) ஆகியோர், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவை நேற்று (05) ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.


இந்தச் சந்திப்பின் போது, கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைவரங்கள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆழமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.


சந்திப்பின் போது கிழக்கு மாகாணத்தின் பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.


இதன்போது கிழக்கு மாகாணத்தில் தற்போது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் மற்றும் சமூக நலத்திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து ஆளுநர் விளக்கமளித்தார்.


மாகாணத்தில் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகள், உட்கட்டமைப்பு குறைபாடுகள் மற்றும் அவற்றுக்கு மாகாண நிர்வாகத்தினால் எடுக்கப்பட்டு வரும் துரிதகதித் தீர்வுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.


யுத்தத்திற்கு பின்னரான மீள்கட்டுமானம்: நீண்டகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு மாகாணம் என்ற ரீதியில், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பை மீளக் கட்டியெழுப்புவதில் உள்ள சவால்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.


யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை முழுமையாக மீளக் கட்டியெழுப்பும் பணிகளில், பிரித்தானிய அரசாங்கம் ஒரு சிறந்த பங்காளியாகத் தனது ஒத்துழைப்புகளை வழங்கும் என இதன்போது உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் உறுதி அளித்தார்.


குறிப்பாக, கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களில் இணைந்து செயற்படத் தயார் என்பதையும், கிழக்கு மாகாணத்தின் மீட்சி மற்றும் வளர்ச்சிப் பாதையில் எமது ஒத்துழைப்பு என்றும் இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.


இந்தக் காத்திரமான சந்திப்பினை நினைவுகூரும் வகையில், ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் (Andrew Patrick) மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் அதிகாரி இசபெல்லா மார்ட்டின் (Isabella Martin) ஆகியோர், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவை நேற்று (05) ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.இந்தச் சந்திப்பின் போது, கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைவரங்கள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆழமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.சந்திப்பின் போது கிழக்கு மாகாணத்தின் பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.இதன்போது கிழக்கு மாகாணத்தில் தற்போது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் மற்றும் சமூக நலத்திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்து ஆளுநர் விளக்கமளித்தார்.மாகாணத்தில் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகள், உட்கட்டமைப்பு குறைபாடுகள் மற்றும் அவற்றுக்கு மாகாண நிர்வாகத்தினால் எடுக்கப்பட்டு வரும் துரிதகதித் தீர்வுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.யுத்தத்திற்கு பின்னரான மீள்கட்டுமானம்: நீண்டகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு மாகாணம் என்ற ரீதியில், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பை மீளக் கட்டியெழுப்புவதில் உள்ள சவால்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை முழுமையாக மீளக் கட்டியெழுப்பும் பணிகளில், பிரித்தானிய அரசாங்கம் ஒரு சிறந்த பங்காளியாகத் தனது ஒத்துழைப்புகளை வழங்கும் என இதன்போது உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் உறுதி அளித்தார்.குறிப்பாக, கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களில் இணைந்து செயற்படத் தயார் என்பதையும், கிழக்கு மாகாணத்தின் மீட்சி மற்றும் வளர்ச்சிப் பாதையில் எமது ஒத்துழைப்பு என்றும் இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.இந்தக் காத்திரமான சந்திப்பினை நினைவுகூரும் வகையில், ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

Advertisement

Advertisement

Advertisement