• May 06 2026

கழுத்து அறுபட்டு முதியவர் பலி; பாதுகாப்பு வேலியைப் பழுதுபாத்தபோது நடந்த துயரம்

Chithra / May 6th 2026, 9:04 am
image


கண்டி  - கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவில்மட பகுதியில் கழுத்து அறுபட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.


தனது வீட்டின் பாதுகாப்பு வேலியை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நபரே இவ்வாறு கிரைண்டர் இயந்திரத்தால் கழுத்து அறுபட்டு உயிரிழந்துள்ளார்.


இந்த விபத்து  நேற்று (05) காலை நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


இவ்வாறு உயிரிழந்தவர் மாவில்மட பகுதியைச் சேர்ந்த 66 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


உயிரிழந்தவர் தனது வீட்டின் முன் பாதுகாப்பு வேலியைப் பழுதுபார்ப்பதற்காகப் பயன்படுத்திய கிரைண்டரில் கழுத்து அறுபட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 


சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கழுத்து அறுபட்டு முதியவர் பலி; பாதுகாப்பு வேலியைப் பழுதுபாத்தபோது நடந்த துயரம் கண்டி  - கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவில்மட பகுதியில் கழுத்து அறுபட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.தனது வீட்டின் பாதுகாப்பு வேலியை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நபரே இவ்வாறு கிரைண்டர் இயந்திரத்தால் கழுத்து அறுபட்டு உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து  நேற்று (05) காலை நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் மாவில்மட பகுதியைச் சேர்ந்த 66 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.உயிரிழந்தவர் தனது வீட்டின் முன் பாதுகாப்பு வேலியைப் பழுதுபார்ப்பதற்காகப் பயன்படுத்திய கிரைண்டரில் கழுத்து அறுபட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement