• May 01 2026

மன்னார் - சிலாவத்துறை மே தின நிகழ்வு!

Ziya / May 1st 2026, 4:05 pm
image

மன்னார் - சிலாவத்துறை, முத்தரிப்புத்துறை சூசையப்பர் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் 01.05.2026இன்றையதினம் தொழிலாளர் தின நிகழ்வுகள் சிறப்புற இடப்பெற்றுள்ளன.


இந்நிகழ்வில் விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசாரவிகரன் பங்கேற்றிருந்தார்.


அந்தவகையில் முத்தரிப்புத்துறை கடற்கரையில் விசேட ஆராதனைகள் இடம்பெற்றதுடன், கடல் ஆசீர்வாதம் என்பனவும் இடம்பெற்றதையடுத்து தொழிலாளர்தின விசேட விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.


குறிப்பாக நீச்சல், படகு சவாரி, மரதன், கரப்பந்து, வலைப்பந்து உள்ளிட்ட விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், கலைநிகழ்வுகள்என்பனவும் இடம்பெற்றன.


மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மற்றும் பங்குத்தந்தையர்கள் வரவேற்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மன்னார் - சிலாவத்துறை மே தின நிகழ்வு மன்னார் - சிலாவத்துறை, முத்தரிப்புத்துறை சூசையப்பர் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் 01.05.2026இன்றையதினம் தொழிலாளர் தின நிகழ்வுகள் சிறப்புற இடப்பெற்றுள்ளன.இந்நிகழ்வில் விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசாரவிகரன் பங்கேற்றிருந்தார்.அந்தவகையில் முத்தரிப்புத்துறை கடற்கரையில் விசேட ஆராதனைகள் இடம்பெற்றதுடன், கடல் ஆசீர்வாதம் என்பனவும் இடம்பெற்றதையடுத்து தொழிலாளர்தின விசேட விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.குறிப்பாக நீச்சல், படகு சவாரி, மரதன், கரப்பந்து, வலைப்பந்து உள்ளிட்ட விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், கலைநிகழ்வுகள்என்பனவும் இடம்பெற்றன.மேலும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மற்றும் பங்குத்தந்தையர்கள் வரவேற்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement