அம்பாறை - சம்மாந்துறை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் நடமாடிய 34 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (18) மாலை கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரிடமிருந்து 1 கிராமுக்கு மேற்பட்ட ஐஸ் மீட்கப்பட்டது.
இந்தக் கைது நடவடிக்கையானது, கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் பி. இஹலகே தலைமையிலான அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகச் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளைச் சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சம்மாந்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய நபர் கைது அம்பாறை - சம்மாந்துறை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் நடமாடிய 34 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (18) மாலை கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபரிடமிருந்து 1 கிராமுக்கு மேற்பட்ட ஐஸ் மீட்கப்பட்டது.இந்தக் கைது நடவடிக்கையானது, கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் பி. இஹலகே தலைமையிலான அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகச் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளைச் சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.