• Apr 26 2026

நாட்டின் பல எரிபொருள் நிலையங்களில் இன்று நீண்ட வரிசை!

shanu / Feb 28th 2026, 8:40 pm
image

நாட்டில் உள்ள பல்வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருள் பெறுவதற்காக இன்று (28)மாலை  முதல் நீண்டவரிசை  ஏற்பட்டுள்ளது .


யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்கு வரிசை காணப்படுகிறது.


யாழ்ப்பாணம் - சித்தங்கேணி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில், எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு மக்கள் வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிந்தது.


வடமராட்சியில் குஞ்சர் கடை, நெல்லியடி  மந்திகை, கிராமக்கோடு பருத்தித்துறை ஆகிய எரிபொருள் நிரப்பும்  நிலையங்களில் மிக நீண்ட வரிசையில் எரிபொருள் நிரப்புவதற்காக மக்கள் காத்திருக்கின்றனர். 


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப நீண்டநேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பெறுவதற்காக இன்று (28)மாலை முந்தியடித்துக் கொண்ட நிலை ஏற்பட்டுள்ளது . 


மட்டக்களப்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏற்பட்ட திடீர் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மீண்டும் பாவனையாளர்கள் கியூ வரிசை நின்று எரிபொருள் நிலைமை ஏற்பட்டுள்ளது.


வாழைச்சேனை. கிரான் .ஓட்டமாவடி போன்ற எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இவ் நிலைமை ஏற்பட்டுள்ளது. 


அம்பாறை  மாவட்டத்தில் பெற்றோல் நிரப்பு நிலையங்களில் திடீரென மக்கள் வரிசைகளில் நின்று வாகனங்களுக்கு பெற்றோல் நிரப்புவதில் முண்டியடிக்கின்றனர்.


அம்பாறை மாவட்டத்தின்  கல்முனை, நற்பிட்டிமுனை, மருதமுனை ,பெரிய நீலாவணை, சாய்ந்தமருது, காரைதீவு ,சம்மாந்துறை ,நிந்தவூர்,   உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான நிலைமை தொடர்கின்றது.


நாட்டின் பல எரிபொருள் நிலையங்களில் இன்று நீண்ட வரிசை நாட்டில் உள்ள பல்வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருள் பெறுவதற்காக இன்று (28)மாலை  முதல் நீண்டவரிசை  ஏற்பட்டுள்ளது .யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்கு வரிசை காணப்படுகிறது.யாழ்ப்பாணம் - சித்தங்கேணி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில், எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு மக்கள் வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிந்தது.வடமராட்சியில் குஞ்சர் கடை, நெல்லியடி  மந்திகை, கிராமக்கோடு பருத்தித்துறை ஆகிய எரிபொருள் நிரப்பும்  நிலையங்களில் மிக நீண்ட வரிசையில் எரிபொருள் நிரப்புவதற்காக மக்கள் காத்திருக்கின்றனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப நீண்டநேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பெறுவதற்காக இன்று (28)மாலை முந்தியடித்துக் கொண்ட நிலை ஏற்பட்டுள்ளது . மட்டக்களப்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏற்பட்ட திடீர் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மீண்டும் பாவனையாளர்கள் கியூ வரிசை நின்று எரிபொருள் நிலைமை ஏற்பட்டுள்ளது.வாழைச்சேனை. கிரான் .ஓட்டமாவடி போன்ற எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இவ் நிலைமை ஏற்பட்டுள்ளது. அம்பாறை  மாவட்டத்தில் பெற்றோல் நிரப்பு நிலையங்களில் திடீரென மக்கள் வரிசைகளில் நின்று வாகனங்களுக்கு பெற்றோல் நிரப்புவதில் முண்டியடிக்கின்றனர்.அம்பாறை மாவட்டத்தின்  கல்முனை, நற்பிட்டிமுனை, மருதமுனை ,பெரிய நீலாவணை, சாய்ந்தமருது, காரைதீவு ,சம்மாந்துறை ,நிந்தவூர்,   உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான நிலைமை தொடர்கின்றது.

Advertisement

Advertisement

Advertisement