அனுராதபுரம் - கஹட்டகஸ்திகிலிய, லுல்நேவ குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூவர் மீது மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்த அனர்த்தம் நேற்று (13) பிற்பகல் 4.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கஹட்டகஸ்திகிலிய பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் இலங்கை இராணுவத்தில் பணியாற்றி வந்த நிலையில், பின்னர் மருத்துவக் காரணங்களுக்காக ஓய்வு பெற்றவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மின்னல் தாக்கியதில் காயமடைந்த ஏனைய இருவரையும் பிரதேச மக்கள் உடனடியாக கஹட்டகஸ்திகிலிய ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
பின்னர், அவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மீன்பிடித்துக் கொண்டிருந்த மூவர் மீது மின்னல் தாக்குதல்; ஒருவர் பலி இருவர் காயம் அனுராதபுரம் - கஹட்டகஸ்திகிலிய, லுல்நேவ குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூவர் மீது மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.இந்த அனர்த்தம் நேற்று (13) பிற்பகல் 4.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் கஹட்டகஸ்திகிலிய பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் இலங்கை இராணுவத்தில் பணியாற்றி வந்த நிலையில், பின்னர் மருத்துவக் காரணங்களுக்காக ஓய்வு பெற்றவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மின்னல் தாக்கியதில் காயமடைந்த ஏனைய இருவரையும் பிரதேச மக்கள் உடனடியாக கஹட்டகஸ்திகிலிய ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.பின்னர், அவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.