பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (14) மீண்டும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பான வழக்கு விசாரணைக்காகவே அவர் இவ்வாறு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
குறித்த விமானக் கொள்வனவு நடவடிக்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில், பணமோசடி குற்றச்சாட்டின் கீழ் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கின் விசாரணைகள் தொடர்பாக நாமல் ராஜபக்ஷ இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதேவேளை, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மற்றுமொரு வழக்கு தொடர்பில் நாமல் ராஜபக்ஷ நேற்று (13) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
இதன்போது, அவரை எதிர்வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும் நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாமல் ராஜபக்ஷவைச் சுற்றி இறுகும் சட்டப் பிடி; இன்று மீண்டும் நீதிமன்றில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (14) மீண்டும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பான வழக்கு விசாரணைக்காகவே அவர் இவ்வாறு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.குறித்த விமானக் கொள்வனவு நடவடிக்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில், பணமோசடி குற்றச்சாட்டின் கீழ் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.இந்த வழக்கின் விசாரணைகள் தொடர்பாக நாமல் ராஜபக்ஷ இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.இதேவேளை, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட மற்றுமொரு வழக்கு தொடர்பில் நாமல் ராஜபக்ஷ நேற்று (13) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.இதன்போது, அவரை எதிர்வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும் நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.