யாழ்ப்பாணத்தில் தேசிய சமாதான பேரவையின் அனுசரணையுடன் SOND நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “பொறுப்புக்கூறல், ஒற்றுமை, பாகுபாடின்மை மீதான நம்பிக்கை, பொறுப்பேற்றல் மற்றும் நல்வாழ்வு (ACT NOW)” எனும் புதிய திட்டத்தின் திட்ட அறிமுகக் கூட்டம் நேற்று யாழ். மரியன்னை பேராலய மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தை தேசிய சமாதான பேரவையின் திட்ட முகாமையாளர் நிரோஷா அந்தோனி வசதிப்படுத்தினார்.
யாழ். மாவட்ட சர்வமத குழுவின் இணைப்பாளர் திருமதி ஜென்சி, கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டதுடன், கூட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு மதத் தலைவர்களும், யாழ் மாவட்ட சர்வமத குழுவின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
ACT NOW திட்டத்தின் நோக்கங்கள், எதிர்பார்க்கப்படும் செயற்பாடுகள் மற்றும் சமூகத்தில் பொறுப்புக்கூறல், ஒற்றுமை, பாகுபாடின்மை, பொறுப்பேற்றல் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதில் திட்டத்தின் பங்களிப்பு தொடர்பாக இக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
பல்வேறு மதங்களைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் சர்வமத குழு உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இக் கூட்டம், சமூக நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான புதிய முயற்சியாக அமைந்தது.
யாழில் ‘ACT NOW’ புதிய திட்டத்தின் அறிமுகக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் தேசிய சமாதான பேரவையின் அனுசரணையுடன் SOND நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “பொறுப்புக்கூறல், ஒற்றுமை, பாகுபாடின்மை மீதான நம்பிக்கை, பொறுப்பேற்றல் மற்றும் நல்வாழ்வு (ACT NOW)” எனும் புதிய திட்டத்தின் திட்ட அறிமுகக் கூட்டம் நேற்று யாழ். மரியன்னை பேராலய மண்டபத்தில் நடைபெற்றது.இக் கூட்டத்தை தேசிய சமாதான பேரவையின் திட்ட முகாமையாளர் நிரோஷா அந்தோனி வசதிப்படுத்தினார்.யாழ். மாவட்ட சர்வமத குழுவின் இணைப்பாளர் திருமதி ஜென்சி, கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டதுடன், கூட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.இந்நிகழ்வில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு மதத் தலைவர்களும், யாழ் மாவட்ட சர்வமத குழுவின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.ACT NOW திட்டத்தின் நோக்கங்கள், எதிர்பார்க்கப்படும் செயற்பாடுகள் மற்றும் சமூகத்தில் பொறுப்புக்கூறல், ஒற்றுமை, பாகுபாடின்மை, பொறுப்பேற்றல் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதில் திட்டத்தின் பங்களிப்பு தொடர்பாக இக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.பல்வேறு மதங்களைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் சர்வமத குழு உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இக் கூட்டம், சமூக நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான புதிய முயற்சியாக அமைந்தது.