• May 01 2026

ஊர்காவற்துறையின் வரவு-செலவுத் திட்டம் 2வது முறையாகவும் தோல்வி!

Ziya / Dec 8th 2025, 1:02 pm
image

ஊர்காவற்துறை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது.

ஊர்காவற்துறை பிரதேசபையின் முதலாவது வரவு-செலவுத் திட்டம் கடந்த 24 ஆம் திகதி தோற்கடிக்கப்பட்ட நிலையில் குறித்த வரவு-செலவுத் திட்டத்தை மீண்டும் சபையில் நிறைவேற்றுவதற்கான விசேட அமர்வு இன்று அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தவிசாளர் அன்னராச தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது சபையின் வருமானம் ஊடாக முன்னெடுக்கப்படும் திட்டங்கள், உதவி கோரியுள்ள முன்மொழிவுகள், சிறப்பு வருவாய் முயற்சிகள், உள்ளிட்ட பல திருத்தங்களுடன் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகவும் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் மக்கள் நலனோ அல்லது தற்போதைய தேவை கருதிய நடைமுறைக்கு ஏற்றதோ அல்லாததாக குறித்த வரவு-செலவுத் திட்டம் மீண்டும் முன்மொழியப்பட்டுள்ளதாகவும், நடைமுறை சாத்தியமான விடயங்களை உதாசீனம் செய்துள்ளதாகவும் கூறி உறுப்பினர்கள் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தனர்.

இதே வேளை வாத பிரதிவாதங்களுக்கு பின்னர் வரவு-செலவுத் திட்டத்தை நிறைவேற்றும் பொருட்டு தவிசாளரால் சபையில் வாக்கெடுப்புக்கு இரண்டாவது தடவையாகவும் விடப்பட்டது.

வரவு-செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக விடப்பட்ட வாக்கெடுப்பின் போது எதிராக 8 வாக்குகளும் ஆதரவாக 5 வாக்கிகளும் கிடைக்கப்பெற்ற நிலையில் குறித்த வரவு-செலவுத் திட்டம்  மேலதிக 3 வாக்குகளால் தோற்கடிக்கப்படுள்ளது.

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது குறித்த பிரதேச சபையின் 13 மொத்த உறுப்பினர்களில் 4 ஆசனங்களை ஈ.பி.டி.பியும் தமிழரசுக் கட்சி 2 ஆசனங்களையும் தேசிய மக்கள் கட்சி 3 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 3 உறுப்பினர்களையும், சங்கு சின்னத்தில் போட்டியிட்ட கட்சி 1 ஆசனத்தையும் பெற்றிருந்தன.

குறித்த பிரதேச சபையின் ஆசனங்களில் முன்னிலை பெற்றிருந்த ஈ.பி.டி.பி ஆட்சி அமைக்க முன்வராத நிலையில் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைப்பதற்கான ஏது நிலையை ஈ.பி.டி.பி வழங்கியிருந்தது.

இதன் அடிப்படையில் 2 உறுப்பினர்களைக் கொண்ட தமிழரசுக் கட்சி ,ஈ.பி.டி.பியின் 4 உறுப்பினர்களது ஆதரவுடன் ஆட்சியமைக்க தனது முன்மொழிவை சபையில் தெரியப்படுத்தியிருந்தது

ஆனால் 3 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் காங்கிரஸ் கட்சியினர், தேசிய மக்கள் சக்தியுடனான நடு நிலமை இணக்கப்பாடுடன் சங்குச் சின்னத்தில் போட்டியிட்ட கட்சியின் ஓர் ஆசனம், தமிழரசுக் கட்சியின் ஓர் ஆசனத்தை கொண்டு சபையின் ஆட்சி அதிகாரத்தை வசப்படுத்தியிருந்தது.

இந்நிலையில் ஆட்சி அமைந்த சில நாள்களிலேயே சபையில் பல்வேறு இழுபறி உருவானது. இது மக்களுக்கு பெரும் அசௌகரியங்களையும் உருவாக்கியது.

அதன் வெளிப்பாடாக மக்கள் விருப்புக்கேற்ப அதிகளவான மக்கள் பிரதிநிதிகள் தமது வாக்கை பிரயோகித்ததால் இன்று நடந்த வரவு-செலவுத் திட்டத்தின் பெறுபேறுகள் சைக்கிள் தலைமையிலான ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக அமைந்தது.

இன்றைய வாக்கெடுப்பில் எதிராக ஈ.பி.டி.பி 4, என்.பி.பி 3, வீடு 1, ஆகிய உறுப்பினர்களது வாக்குகள் பதியப்பட்டன.ஆதரவாக சைக்கிள் கட்சியின் தவிசாளர் மற்றும் இரு உறுப்பினருடன், சங்கின் ஓர் ஆசனம்  தவிசாளர் பதவிக்காக தமிழரசில் இருந்து நழுவிச் சென்றவரது வாக்குடன் 5 வாக்குகள் கிடைத்தன.

இதன்படி 2026 க்கான பாதீடு மேலதிக 3 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

உள்ளூரதிகார சபை சட்டத்தின் பிரகாரம் இரண்டாவது தடவையும் வரவு-செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் அது தவிசாளரது தன்னிச்சையான சிறப்பு அதிகாரத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டு செயலாக்கம் பெறவுள்ளது.

இதேவேளை குறித்த தோல்வியானது சபையின் ஆட்சி மாற்றமாக அமையாது விடினும் ஆட்சியாகர்களின் மீதும் உறுப்பினர்கள் மீதும் மக்களுக்கு அவ நம்பிக்கையை உருவாக்கியுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளதாகவும் இது போன்ற பல சபைகளில் கட்சிகளது அதிகார மோகமும் தவிசாளர்களது இரு வருட தன்னதிகார மோக நம்பிக்கையுமே இவ்வாறான துர்ப்பாக்கிய நிலைகள் உருவாக காரணம் என்றும் மக்கள் சுட்டிக்காட்டி வருத்தம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது


ஊர்காவற்துறையின் வரவு-செலவுத் திட்டம் 2வது முறையாகவும் தோல்வி ஊர்காவற்துறை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது.ஊர்காவற்துறை பிரதேசபையின் முதலாவது வரவு-செலவுத் திட்டம் கடந்த 24 ஆம் திகதி தோற்கடிக்கப்பட்ட நிலையில் குறித்த வரவு-செலவுத் திட்டத்தை மீண்டும் சபையில் நிறைவேற்றுவதற்கான விசேட அமர்வு இன்று அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தவிசாளர் அன்னராச தலைமையில் இடம்பெற்றுள்ளது.இதன்போது சபையின் வருமானம் ஊடாக முன்னெடுக்கப்படும் திட்டங்கள், உதவி கோரியுள்ள முன்மொழிவுகள், சிறப்பு வருவாய் முயற்சிகள், உள்ளிட்ட பல திருத்தங்களுடன் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகவும் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.இந்நிலையில் மக்கள் நலனோ அல்லது தற்போதைய தேவை கருதிய நடைமுறைக்கு ஏற்றதோ அல்லாததாக குறித்த வரவு-செலவுத் திட்டம் மீண்டும் முன்மொழியப்பட்டுள்ளதாகவும், நடைமுறை சாத்தியமான விடயங்களை உதாசீனம் செய்துள்ளதாகவும் கூறி உறுப்பினர்கள் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தனர்.இதே வேளை வாத பிரதிவாதங்களுக்கு பின்னர் வரவு-செலவுத் திட்டத்தை நிறைவேற்றும் பொருட்டு தவிசாளரால் சபையில் வாக்கெடுப்புக்கு இரண்டாவது தடவையாகவும் விடப்பட்டது.வரவு-செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக விடப்பட்ட வாக்கெடுப்பின் போது எதிராக 8 வாக்குகளும் ஆதரவாக 5 வாக்கிகளும் கிடைக்கப்பெற்ற நிலையில் குறித்த வரவு-செலவுத் திட்டம்  மேலதிக 3 வாக்குகளால் தோற்கடிக்கப்படுள்ளது.கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது குறித்த பிரதேச சபையின் 13 மொத்த உறுப்பினர்களில் 4 ஆசனங்களை ஈ.பி.டி.பியும் தமிழரசுக் கட்சி 2 ஆசனங்களையும் தேசிய மக்கள் கட்சி 3 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 3 உறுப்பினர்களையும், சங்கு சின்னத்தில் போட்டியிட்ட கட்சி 1 ஆசனத்தையும் பெற்றிருந்தன.குறித்த பிரதேச சபையின் ஆசனங்களில் முன்னிலை பெற்றிருந்த ஈ.பி.டி.பி ஆட்சி அமைக்க முன்வராத நிலையில் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைப்பதற்கான ஏது நிலையை ஈ.பி.டி.பி வழங்கியிருந்தது.இதன் அடிப்படையில் 2 உறுப்பினர்களைக் கொண்ட தமிழரசுக் கட்சி ,ஈ.பி.டி.பியின் 4 உறுப்பினர்களது ஆதரவுடன் ஆட்சியமைக்க தனது முன்மொழிவை சபையில் தெரியப்படுத்தியிருந்ததுஆனால் 3 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் காங்கிரஸ் கட்சியினர், தேசிய மக்கள் சக்தியுடனான நடு நிலமை இணக்கப்பாடுடன் சங்குச் சின்னத்தில் போட்டியிட்ட கட்சியின் ஓர் ஆசனம், தமிழரசுக் கட்சியின் ஓர் ஆசனத்தை கொண்டு சபையின் ஆட்சி அதிகாரத்தை வசப்படுத்தியிருந்தது.இந்நிலையில் ஆட்சி அமைந்த சில நாள்களிலேயே சபையில் பல்வேறு இழுபறி உருவானது. இது மக்களுக்கு பெரும் அசௌகரியங்களையும் உருவாக்கியது.அதன் வெளிப்பாடாக மக்கள் விருப்புக்கேற்ப அதிகளவான மக்கள் பிரதிநிதிகள் தமது வாக்கை பிரயோகித்ததால் இன்று நடந்த வரவு-செலவுத் திட்டத்தின் பெறுபேறுகள் சைக்கிள் தலைமையிலான ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக அமைந்தது.இன்றைய வாக்கெடுப்பில் எதிராக ஈ.பி.டி.பி 4, என்.பி.பி 3, வீடு 1, ஆகிய உறுப்பினர்களது வாக்குகள் பதியப்பட்டன.ஆதரவாக சைக்கிள் கட்சியின் தவிசாளர் மற்றும் இரு உறுப்பினருடன், சங்கின் ஓர் ஆசனம்  தவிசாளர் பதவிக்காக தமிழரசில் இருந்து நழுவிச் சென்றவரது வாக்குடன் 5 வாக்குகள் கிடைத்தன.இதன்படி 2026 க்கான பாதீடு மேலதிக 3 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.உள்ளூரதிகார சபை சட்டத்தின் பிரகாரம் இரண்டாவது தடவையும் வரவு-செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் அது தவிசாளரது தன்னிச்சையான சிறப்பு அதிகாரத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டு செயலாக்கம் பெறவுள்ளது.இதேவேளை குறித்த தோல்வியானது சபையின் ஆட்சி மாற்றமாக அமையாது விடினும் ஆட்சியாகர்களின் மீதும் உறுப்பினர்கள் மீதும் மக்களுக்கு அவ நம்பிக்கையை உருவாக்கியுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளதாகவும் இது போன்ற பல சபைகளில் கட்சிகளது அதிகார மோகமும் தவிசாளர்களது இரு வருட தன்னதிகார மோக நம்பிக்கையுமே இவ்வாறான துர்ப்பாக்கிய நிலைகள் உருவாக காரணம் என்றும் மக்கள் சுட்டிக்காட்டி வருத்தம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement