• Apr 30 2026

யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் மே தின ஊடக அறிக்கை!

dorin / Apr 30th 2026, 9:06 pm
image

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கமானது மே தினம் தொடர்பான ஊடக அறிக்கை ஒன்றைய இன்றையதினம் வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

தற்காலத்தில் சர்வதேசம் முகம் கொடுத்துள்ள ஏகாதிபத்யவாத இனப்படுகொலைகளை நிகழ்த்தும் போருக்கு எதிராகவும், அதனோடு கூட எமது நாட்டில் இடம்பெற்ற, பெற்றுக்கொண்டிருக்கும் இன அழிப்பை மூடி மறைக்கும் அரசுக்கு எதிராகவும் அணி திரள வேண்டிய காலகட்டத்தில் நாம் இந்நிகழ்வை நினைவுகூருகின்றோம்.

 பட்டாம்பூச்சி  விளைவுபோன்று சர்வதேசத்தில் அரங்கேறும் இவ் அராஜக செயற்பாடானது உலகின் வறிய, வளர்முக நாடுகளை மிகவும் பாதிக்கின்றது. ஜக்கிய நாடுகள் அமைதிக்காக நிரந்தர வளர்ச்சித்திட்டத்தை முன்னெடுக்கும் அதேவேளை திரைமறைவில் தமது ஏகாதிபத்யவாதத்திற்காக பல போர்களை செய்து அழிவை ஏற்படுத்தும் வல்லரசுகளுக்கு நாம் எமது எதிர்ப்பை தெரியப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். 

மேலும் எமது தேசம் சார்ந்து நாட்டில் இனவாதம், மதவாதம் பேச வேண்டாம் எனக்கூறிக்கொண்டு பூர்வீக குடிகளின் இறையாண்மையை அழிக்கும் மறைமுக செயற்பாடுகளுக்கு எதிராகவும் நாம் குரல் கொடுக்க வேண்டியுள்ளது.

 ஓர் தொழிற்சங்கமாக முதலாழித்துவமற்ற ஓர் ஜனநாயகநாட்டில் தலைதூக்கியுள்ள அதிகாரத்துவத்திற்கு எதிராகவும் நாம் இவ்வேளை அவதானத்தை செலுத்தவேண்டியுள்ளது. நாட்டில் புரையோடிக்கிடக்கும் ஊழல், போதை போன்ற கிருமிகளை வைத்து அடிப்படையில் உழைக்கும் வர்க்கத்தின் குரல்வளையை நசுக்கி அவர்களை சிந்திக்கவிடாது மறைமுகமான இனசுத்திகரிப்பு எமது தாயகத்தில் புரையோடிப்போயுள்ளது. இவைகளை கண்டும்காணாது அரசு மக்களை ஏமாற்றும் வேலைத்திட்டங்களையும் மேற்கொண்டு வருவதை அவதானிக்க முடிகிறது.

இவ்வாறாக சர்வதேசத்திலும், எமது தேசத்திலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் அரங்கேற்றப்படும் இனச்சுத்திகரிப்புக்கும், எகாதிப்பதியத்திற்கும் எதிராக இரத்தக்கறை படிந்த இன்றைய தினத்தில் குரலை உயர்த்தி எமது பலத்தை ஒருங்கிணைக்க பிரயர்த்தனம் மேற்கொள்வோமாக என குறிப்பிடப்பட்டுள்ளது.


யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் மே தின ஊடக அறிக்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கமானது மே தினம் தொடர்பான ஊடக அறிக்கை ஒன்றைய இன்றையதினம் வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,தற்காலத்தில் சர்வதேசம் முகம் கொடுத்துள்ள ஏகாதிபத்யவாத இனப்படுகொலைகளை நிகழ்த்தும் போருக்கு எதிராகவும், அதனோடு கூட எமது நாட்டில் இடம்பெற்ற, பெற்றுக்கொண்டிருக்கும் இன அழிப்பை மூடி மறைக்கும் அரசுக்கு எதிராகவும் அணி திரள வேண்டிய காலகட்டத்தில் நாம் இந்நிகழ்வை நினைவுகூருகின்றோம். பட்டாம்பூச்சி  விளைவுபோன்று சர்வதேசத்தில் அரங்கேறும் இவ் அராஜக செயற்பாடானது உலகின் வறிய, வளர்முக நாடுகளை மிகவும் பாதிக்கின்றது. ஜக்கிய நாடுகள் அமைதிக்காக நிரந்தர வளர்ச்சித்திட்டத்தை முன்னெடுக்கும் அதேவேளை திரைமறைவில் தமது ஏகாதிபத்யவாதத்திற்காக பல போர்களை செய்து அழிவை ஏற்படுத்தும் வல்லரசுகளுக்கு நாம் எமது எதிர்ப்பை தெரியப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். மேலும் எமது தேசம் சார்ந்து நாட்டில் இனவாதம், மதவாதம் பேச வேண்டாம் எனக்கூறிக்கொண்டு பூர்வீக குடிகளின் இறையாண்மையை அழிக்கும் மறைமுக செயற்பாடுகளுக்கு எதிராகவும் நாம் குரல் கொடுக்க வேண்டியுள்ளது. ஓர் தொழிற்சங்கமாக முதலாழித்துவமற்ற ஓர் ஜனநாயகநாட்டில் தலைதூக்கியுள்ள அதிகாரத்துவத்திற்கு எதிராகவும் நாம் இவ்வேளை அவதானத்தை செலுத்தவேண்டியுள்ளது. நாட்டில் புரையோடிக்கிடக்கும் ஊழல், போதை போன்ற கிருமிகளை வைத்து அடிப்படையில் உழைக்கும் வர்க்கத்தின் குரல்வளையை நசுக்கி அவர்களை சிந்திக்கவிடாது மறைமுகமான இனசுத்திகரிப்பு எமது தாயகத்தில் புரையோடிப்போயுள்ளது. இவைகளை கண்டும்காணாது அரசு மக்களை ஏமாற்றும் வேலைத்திட்டங்களையும் மேற்கொண்டு வருவதை அவதானிக்க முடிகிறது.இவ்வாறாக சர்வதேசத்திலும், எமது தேசத்திலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் அரங்கேற்றப்படும் இனச்சுத்திகரிப்புக்கும், எகாதிப்பதியத்திற்கும் எதிராக இரத்தக்கறை படிந்த இன்றைய தினத்தில் குரலை உயர்த்தி எமது பலத்தை ஒருங்கிணைக்க பிரயர்த்தனம் மேற்கொள்வோமாக என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement